[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்
  • BREAKING-NEWS வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS மதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்
  • BREAKING-NEWS கர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி

ஐபிஎல் சாம்பியன் யார்? மீண்டும் ஒருமுறை அசத்த காத்திருக்கும் சிஎஸ்கே 

tomorrow-2018-ipl-final-cskvsrh

11ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்லும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி ஃபைனலுக்கு முன்னேறியது. இந்நிலையில் கோப்பையை யார் வெல்வது என்ற முனைப்பில் 2வது முறை சாம்பியனான சென்னை அணியும், ஒரு முறை சாம்பியனான ஹைதராபாத் அணியும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. ஐபிஎல் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7ஆவது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடுகிறது. 

தோனி தலைமையிலான சென்னை அணி ஏற்கனவே 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டாவது முறையாக ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் களமிறங்குகிறது. ஹைதரபாத் அணி கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்திய சாம்பியன் பட்டம் வென்றுருந்தது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் நேருக்கு நேர் மோதிய 9 ஆட்டங்களில், சென்னை அணி 7ல் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிட்டதக்கது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close