[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு விருதை அர்ப்பணித்த ரஷித்கான்!

rashid-khan-dedicate-his-award-to-people-who-lost-their-lives-in-a-blast

'கொல்கத்தாவுக்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது' என்று ஐதராபாத் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் கூறினார். 

கடந்த ஒன்றரை மாதமாக நடந்த ஐ.பிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா, நாளை நிறைவு பெறுகிறது. இதற்கு முன், 8 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் 56 லீக் போட்டிகள் நடந்தன. இதில், பிளே ஆப் சுற்றுக்கு ஐதராபாத், சென்னை, ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் முன்னேறின. முதலாவது தகுதிச் சுற்றில் சென்னை அணி, ஐதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்நிலையில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த ஐதராபாத்தும், வெளியேற்றுதல் சுற்றில் வெற்றிகண்ட கொல்கத்தா அணியும் இறுதிப் போட்டிக்கான 2வது தகுதி சுற்றில் நேற்று மோதின. கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. ரஷித் கான் 10 பந்தில் 34 ரன்கள் குவித்தார்.  



பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் அந்த அணி தோல்வி அடைந்தது. ஐதராபாத் சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

பின்னர் ரஷித் கான் கூறும்போது, ‘இந்தப் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. பேட்ஸ்மேனாகத்தான் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினேன். அதனால் நம்பிக்கை இருந்தது. பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என மூன்றிலும் நூறு சதவிகித உழைப்பைக் கொடுத்தேன். என் திறமை மீது முழு நம்பிக்கை வைத்தேன். பந்தை நேராக அடித்து ஆடும்படி பயிற்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். அதனால் வேறு எந்த கவனமும் இன்றி, மெதுவான பந்தாக இருந்தாலும் நேரடியாக அடித்து ஆடினேன். ரன்கள் கிடைத்தது. இதற்காகக் கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டேன். இந்த ஆட்ட நாயகன் விருதை எனது நாட்டில் என் சொந்த ஊரின் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close