[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.
  • BREAKING-NEWS நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்
  • BREAKING-NEWS மதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு
  • BREAKING-NEWS ஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்? - தம்பிதுரை எம்.பி.
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது? - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி

குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு விருதை அர்ப்பணித்த ரஷித்கான்!

rashid-khan-dedicate-his-award-to-people-who-lost-their-lives-in-a-blast

'கொல்கத்தாவுக்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது' என்று ஐதராபாத் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் கூறினார். 

கடந்த ஒன்றரை மாதமாக நடந்த ஐ.பிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா, நாளை நிறைவு பெறுகிறது. இதற்கு முன், 8 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் 56 லீக் போட்டிகள் நடந்தன. இதில், பிளே ஆப் சுற்றுக்கு ஐதராபாத், சென்னை, ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் முன்னேறின. முதலாவது தகுதிச் சுற்றில் சென்னை அணி, ஐதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்நிலையில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த ஐதராபாத்தும், வெளியேற்றுதல் சுற்றில் வெற்றிகண்ட கொல்கத்தா அணியும் இறுதிப் போட்டிக்கான 2வது தகுதி சுற்றில் நேற்று மோதின. கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. ரஷித் கான் 10 பந்தில் 34 ரன்கள் குவித்தார்.  பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் அந்த அணி தோல்வி அடைந்தது. ஐதராபாத் சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

பின்னர் ரஷித் கான் கூறும்போது, ‘இந்தப் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. பேட்ஸ்மேனாகத்தான் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினேன். அதனால் நம்பிக்கை இருந்தது. பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என மூன்றிலும் நூறு சதவிகித உழைப்பைக் கொடுத்தேன். என் திறமை மீது முழு நம்பிக்கை வைத்தேன். பந்தை நேராக அடித்து ஆடும்படி பயிற்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். அதனால் வேறு எந்த கவனமும் இன்றி, மெதுவான பந்தாக இருந்தாலும் நேரடியாக அடித்து ஆடினேன். ரன்கள் கிடைத்தது. இதற்காகக் கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டேன். இந்த ஆட்ட நாயகன் விருதை எனது நாட்டில் என் சொந்த ஊரின் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close