[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு

தோனியை பழி தீர்க்க காத்திருக்கும் வில்லியம்சன் !

williamson-waiting-to-take-revenge-on-csk-in-finals-ahead-of-qualifier-2

ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதப்போவது எந்த அணி என நாளை நடைபெறும் இரண்டாவது தகுதிப் போட்டியில் தெரிந்துவிடும். கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறும் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸை ஒரு முறைக் கூட வெல்லவில்லை ஐதராபாத் அணி. இரண்டு லீக் போட்டிகளிலும், ஒரு தகுதி போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸிடம் தோல்வியை மட்டுமே தழுவியது ஐதராபாத் அணி. நாளை நடைபெறும்
போட்டியில் கொல்கத்தாவை வெல்லும் பட்சத்தில், இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை இறுதிப் போட்டியில் பழி தீரக்க காத்திருக்கிறது வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ்.

ஆனால், கொல்கத்தாவை அவ்வளவு எளிதாக வென்று முடியுமா என்ன ? தினேஷ் கார்த்திக் தலைமயிலான நைட் ரைடர்ஸ் அணி சாதுர்யமாக விளையாடுவதில் கைதேர்ந்தவர்களாக உள்ளனர். எத்தகைய இக்கட்டான சூழ்நிலையையும் சமாளித்து இறுதியில் விஸ்வரூபம் எடுத்திவிடும் அந்த அணி. ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிரான நேற்றைய போட்டியில் கூட தினேஷ் கார்த்திக் 38 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். அதில் இரண்டு சிக்சர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும். கடைசியில் அதிரடியாக விளையாடிய ஆண்ட்ரூ ரஸல் 25 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தார். அதில் 5 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும். இப்படிப்பட்ட வலுவான அணியாக இருக்கிறது கொல்கத்தா. பவுலிங்கும் கொல்கத்தாவுக்கு சாதகமாகவே இருக்கிறது.

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை. தொடக்க ஆட்டக்காரர்கள் தவாண், கோஸ்வாமி, வில்லியம்சன் தவிர யூசுப் பதான் மட்டுமே சிறப்பாக விளையாடுகின்றனர். இந்தத் தொடரை பொறுத்தவரை மணிஷ் பாண்டே, ஷகிப் உல் ஹாசன் ஆகியோர் பெரியளவில் சோபிக்கவில்லை என்பது ஐதராபாதுக்கு பின்னடைவு. ஆனால், பவுலிங்களில் ஐதராபாத் தெறி மாஸ் காட்டுகிறது. புவனேஷ்வர் குமார், ரஷித்கான், சித்தார்த் கவுல் ஆகியோர் பேட்ஸ்மேன்களை திணற வைக்கின்றனர். இதனால்தான், பலப்போட்டிகளில் ஐதராபாத் குறைவான ரன்கள் எடுத்தாலும் சிறப்பான பவுலிங் மூலம் வெற்றிப் பெற்றுள்ளது. இதன் காரணமாக நாளை நடைபெறவுள்ள போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

இந்தப் போட்டியில் கிரிக்கெட் ரசிகர்களின் கண்கள் அனைத்தும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் கேப்டன் வில்லியம்சன் மீதே இருக்கிறது. இந்தத் தொடரில் அந்த அணிக்கு சிம்மசொப்பனமாக இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ். எனவே, தோனியை இறுதிப்போட்டியில் வீழ்த்துவதற்காகவே கொல்கத்தாவை நாளைய போட்டியில் ஜெயித்துக்காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close