[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.
  • BREAKING-NEWS நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்
  • BREAKING-NEWS மதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு
  • BREAKING-NEWS ஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்? - தம்பிதுரை எம்.பி.
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது? - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி

‘பிளே ஆஃப்’வாய்ப்பில் இருந்து மும்பையை வெளியேற்றிய மேக்ஸ்வெல் -போல்ட் கூட்டணி !

delhi-daredevils-vs-mumbai-indians-55th-match-main-breakthrough

நேற்று நடைபெற்ற மும்பை, டெல்லி இடையிலான போட்டியில், மேக்ஸ்வெல் மற்றும் போல்ட் இருவரும் இணைந்து இரண்டு கேட்சுகள் பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினர்.

ஐபிஎல் தொடரின் 55-வது ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் வென்றால் ‘பிளே ஆஃப்’ வாய்ப்பு என்ற முக்கியமான ஆட்டத்தில் களம்  இறங்கியது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா ‘டாஸ்’ வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஒவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிக பட்சமாக ரிஷப் பாண்ட் 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். அதில் 4 சிக்சர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும். 

அடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 19.3 ஒவரில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. அந்த அணியில் அதிகபட்சமாக  தொடக்க வீரர் லெவிஸ் 31 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். அதில் 4 சிக்சர்களும், 3 பவுண்டர்களும் சேரும். இப்போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இழந்தது. 

இந்தப் போட்டியில் மும்பை அணி பேட்டிங் செய்த போது, சந்தீப் லமிசானே வீசிய 9-வது ஒவரின் முதல் பந்தை, அப்போது பேட்டிங் செய்துக் கொண்டிருந்த பொலார்டு, சிக்சருக்கு அடிக்க முயன்றார். அப்போது எல்லைக் கோட்டு அருகே நின்றுருந்த டெல்லி அணி வீரர் மேக்ஸ்வெல் அந்தப் பந்தை எட்டிப் பிடிக்க முயன்றார். அப்போது நிலை தடுமாறிய அவர் பிடித்த பந்தை அருகே இருந்த சக வீரர் போல்ட் இடம் தூக்கி வீசினார். அந்தப் பந்தை போல்ட் லாவகமாக கேட்ச் பிடித்ததன் மூலம் பொலார்டை அவுட் ஆகி வெளியேறினார். 

அதேபோல் 13.4 வது ஓவரில் மும்பை அணி 121 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறிக்கொண்டிருந்த போது கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது பட்டேல் வீசிய அந்த ஒவரின் 5-வது பந்தை கேப்டன் ரோகித் சர்மா தூக்கி அடித்தார். அதே இடத்தில் எல்லை கோட்டின் அருகே நின்று இருந்த மேக்ஸ்வெல்  பந்தை துள்ளியமாக கணித்து பந்தை பிடித்து போல்ட்டிடம் வீசினார். அதை எதே பயிற்சி செய்யும் போது பந்தை பிடிப்பது போல மிக எளிதாக போல்ட் அப்பந்தை பிடிக்க, ரோகித் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த இரு கேட்சுகளும் மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிகழ்வை டெல்லி அணி ரசிகர்கள் சமூகவளைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close