[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.

ஏப்ரல் டீசன்ட், மே பயங்கரம்: அஸ்வின் அதிருப்தி!

we-had-a-decent-april-but-a-horrible-may-ashwin

’எங்களுக்கு ஏப்ரல் மாதம்  டீசன்டாக அமைந்தது. ஆனால் மே மாதம் பயங்கரமாக மாறிவிட்டது’ என்று பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் கூறினார்.

இந்த ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் நேற்று மோதின. முதலி ல் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 19.4 ஓவர்களில் 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கருண் நாயர் 54 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் 4 ஓவர்களில் வெறும் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்தினார் நிகிடி. ஷர்துல் தாகூர், பிராவோ, தலா இரண்டு விக்கெட்டுகளை வீத்தினர். 

பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 19.1 ஓவரில் 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுரேஷ் ரெய்னா 48 பந்தில் 61 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆட்ட நாயகன் விருது லுங்கி நிகிடிக்கு வழங்கப்பட்டது.

பின்னர் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கூறும்போது, ‘நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. பவர் பிளேயில் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். கருண் நாயர் சிறப்பாக ஆடினார். இருந்தும் 20-30 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். சில கேட்ச்களை கோட்டைவிட்டோம். எங்களுக்கு ஏப்ரல் மாதம் எங்களுக்கு டீசன்டாக அமைந்தது. ஆனால் மே மாதம் பயங்கரமாக மாறிவிட்டது. மொகாலியில் நடந்த போட்டிகளில் கே.எல்.ராகுலும் கிறிஸ் கெயிலும் அதிக ரன்கள் குவித்தார்கள். நடுவரிசை வீரர்கள் சரியாக ஆடவில்லை. சரிசெய்ய முயன்றோம். எதிர்பார்த்தபடி அமையவில்லை. அதுதான் இரண்டாம் பாதியில் எங்களை பாதித்துவிட்டது. எங்கள் அணியில்தான் அதிக விக்கெட் வீழ்த்தியதற்கான பர்பிள் தொப்பி வைத்திருக்கும் ஆண்ட்ரு டை இருக்கிறார். இருந்தும் நாங்கள் சரியாக செயல்படவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டது. இந்த தொடர் முழுவதும் கே.எல்.ராகுல் சிறப்பாக ஆடினார். அங்கித்தும் நன்றாக பந்துவீசினார்’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close