[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயல் பாதிப்புக்கு பிரதமரை சந்தித்து நிவாரண நிதி கோர டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

லின், உத்தப்பா மிரட்டல்: பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது கொல்கத்தா!

narine-lynn-and-uthappa-book-kkr-s-playoffs-spot

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. 

ஐபிஎல் தொடரில், நேற்று நடைபெற்ற 54வது லீக் ஆட்டத்தில், ஐதராபாத் சன் ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் ஷிகர் தவானும், ஸ்ரீவத் கோஸ்வாமியும் களமிறங்கி அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. பவர்பிளேயான முதல் 6 ஓவர்களில் 60 ரன்னைத் தொட்டது. கோஸ்வாமி 35 ரன்கள் எடுத்திருந்தபோது, குல்தீப் யாதவ் பந்தை தூக்கியடித்தார். அது ரஸலிடம் கேட்ச் ஆனது. 

இதையடுத்து கேப்டன் வில்லியம்சன் வந்தார். நடப்புத் தொடரில் செம ஃபார்மில் இருக்கும் வில்லியம்சன் இந்தப் போட்டியிலும் அதிரடி காட்டினார். 17 பந்தில் மூன்று சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 36 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட் ஆனார். இருந்தும் ஐதராபாத் அணியின் ஸ்கோர் 200- ஐ தாண்டும் என்ற கணிக்கப்பட்டது. ஆனால் தவான் 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆக, அந்த அணியின் ரன் வேகம் குறைந்தது. 

முதலில் ஐதராபாத்தை கட்டுப்படுத்த தவறிய கொல்கத்தா பந்துவீச்சாளர்கள், பிறகு மிரட்டத் தொடங்கினர். இதனால் அடுத்து வந்த ஐதராபாத் வீரர்களால் அதிரடி காட்ட முடியவில்லை. அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 172 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா தரப்பில் பிரசித் கிருஷ்ணா, நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

(போட்டியை ரசிக்கும் தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜா)

இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடரஸ் அணி, 19.4 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. 

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் லின்னும் சுனில் நரேனும் அருமையான தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். 3.4 ஓவர்களில் அந்த அணி 52 ரன்கள் சேர்த்தபோது, சுனில் நரேன் விக்கெட்டை இழந்தது. அடுத்த வந்த ராபின் உத்தப்பாவும் லின்னும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். லின் 54 ரன்களிலும் ராபின் உத்தப்பா 45 ரன்களிலும் அவுட் ஆக, கேப்டன் தினேஷ் கார்த்திக் 26 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் தரப்பில் சித்தார்த் கவுல், பிராத்வொயிட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். கிறிஸ் லின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

இந்த வெற்றியின் மூலம் 16 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா அணி முன்னேறியது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close