[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

அடுத்தப் போட்டியில் இருந்து... தோனி புது முடிவு!

anybody-can-get-opportunities-from-here-on-dhoni

’இந்தத் தோல்வி ஏமாற்றமாக இருந்தாலும் எங்களால் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும் என்று நினைக்கவில்லை’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறினார். 

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 52 வது லீக் போட்டியில் சிஎஸ்கேவும் டெல்லி டேர்டெவில்ஸும் மோதின. சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டதாலும் டெல்லி அணி, அடுத்தச் சுற்றில் இருந்து வெளியேறிவிட்டதாலும் இது சம்பிரதாயப் போட்டியாக அமைந்தது. இருந்தாலும் இரு அணி வீரர்களும் களத்தில் கடுமையாகப் போராடினர்.

முதலில் ஆடிய டெல்லி அணி 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்தது. பிராவோ வீசிய கடைசி ஓவரில் ஹர்ஷல் பட்டேல் 3 சிக்சரும், விஜய் சங்கர் ஒரு சிக்சரும் விளாசி ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினர். பிராவோ, 4 ஓவர்கள் வீசி 52 ரன்களைக் கொடுத்தார். ஹர்ஷல் பட்டேல் விஜய் சங்கர் தலா 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

163 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அம்பத்தி ராயுடு 29 பந்துகளில் 50 ரன் எடுத்தார். 16 பந்தில் 36 ரன்களும் ஒரு விக்கெட்டையும் வீழ்த்திய டெல்லி அணியின் ஹர்ஷல் படேல்
ஆட்டநாயகன் விருது பெற்றார். 

போட்டிக்குப் பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, ‘ இந்தத் தோல்வி ஏமாற்றமாக இருந்தாலும் எங்களால் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும் என்று நினைக்கவில்லை. எங்கள் வீரர்களிடம், ’பாயின்ட் டேபிளை பார்க்க வேண்டாம், ஒரு நேரத்தில் ஒரு போட்டியை மட்டும் யோசிப்போம். உங்கள் பலத்தை இன்னும் பலப்படுத்துங்கள், அதோடு பலவீனங்களையும் பலப்படுத்துங்கள்’ என்று கூறியிருந்தேன். சில ஏரியாவில் எங்களை இன்னும் பலப்படுத்த வேண்டியிருக்கிறது. ஓபனிங்கில் மட்டுமல்ல மிடில் ஆர்டரிலும் பார்ட்னர்ஷிப் அமைய வேண்டும். இதுவரை அதிகமான பேட்ஸ்மேன்களை நாங்கள் பயன்படுத்தவில்லை. அடுத்தப்போட்டியில் இருந்து யாருக்கு வேண்டுமானாலும் வாய்ப்பு கிடைக்கலாம். உடல்ரீதியாக பலமாக இருப்பதைவிட மனரீதியாக அவர்கள் தங்களை பலப்படுத்தவேண்டும். இதைத்தவிர நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டோம். கடைசிக்கட்ட ஓவர்களில் பந்துவீசுவதில் சரியாகிவிட்டால் எங்கள் அணி சிறந்ததுதான். இன்னும் ஒரு லீக் போட்டி பாக்கி இருக்கிறது. அதுவரை பார்ப்போம்.

பந்துவீச்சாளர்களின் பலம், பிட்சின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து நீங்கள் நூறு வெவ்வேறு திட்டங்களை அவர்களுக்கு வழங்க முடியும். பலமுறை, பிட்ச்-சின் தன்மையை பொறுத்து பந்துவீச்சாளர்களை மாற்றியிருக்கிறோம். அதனால்தான் இப்போது பிளே ஆப் வரை வந்திருக்கி றோம். ஒவ்வொருவருக்கும் ஒரு நாள் வரும். அதில் ஒரு வீரர் ஒன்று இரண்டு ஓவர்களில் சரியாக விளையாடினால் வெற்றி பெற்றுவிடலாம். இது எல்லாருக்கும் பொருந்தும்.

இரண்டாம் பாதியில் பிட்ச் கடினமாகிவிட்டது. இது எப்படி மாறும் என்பதைக் கணிக்க கடினமாக இருந்தது. தொடர்ந்து ஸ்லோவாகிக் கொண்டே வந்தது. அதோடு டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசினர். அதனால் போட்டி மாறிவிட்டது’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close