[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.

’நண்பேன்டா’ டி வில்லியர்ஸின் ஸ்பைடர்மேன் கேட்ச்: விராத் கோலி ஆச்சரியம்

ab-s-catch-was-spiderman-stuff-virat-kohli

’டிவில்லியர்ஸ் பிடித்த அந்த கேட்ச் அபாரம். அது ஸ்பைடர்மேன் கேட்ச். சாதாரண மனிதனால் அப்படிப் பிடிக்க முடியாது’ என்று விராத் கோலி கூறினார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 51-வது லீக் போட்டியில் சன்ரைசர் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. பெங்களூரில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் டிவில்லியர்ஸும் மொயின் அலியும் ஐதராபாத் பந்துவீச்சை சிதறடித்தனர். போட்டி நடந்த சின்னசாமி மைதானம் சிறியது என்பதால் பந்துகள் பவுண்டரிக்கும் சிக்சருக்கும் பறந்தன. 

டிவில்லியர்ஸ் 39 பந்துகளில் 69 ரன்களும், மொயின் அலி 34 ரன்களில் 65 ரன்களும் எடுத்து அவுட் ஆயினர். கடைசியில், கிராண்ட்ஹோம் 17 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார். 
பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. 

பின்னர் ஆடிய ஐதராபாத் அணியால் 20 ஒவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் 81 ரன்களும் மனீஷ் பாண்டே 68 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பெங்களூரு அணி. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது.

(நண்பேன்டா)

வெற்றிக்குப் பின் பேசிய விராத் கோலி, ‘இதில் வெற்றிபெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. டி வில்லியர்ஸ், மொயின் அலி, கிராண்ட்ஹோம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பந்துகளை அடிப்பதற்கு கடினமாகத்தான் இருந்தது. இருந்தாலும் சிறப்பாக அடித்து, நல்ல ஸ்கோரை தந்தார்கள். பவுலர்களையும் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு எளிதாக எதுவும் கிடைக்கவில்லை. பனிப்பொழி இருந்தது. ஆனாலும் நன்றாகப் பந்துவீசினார்கள். இந்தப் போட்டியில் டிவில்லியர்ஸ் பிடித்த அந்த கேட்ச் (ஹேல்ஸ் அடித்த பந்தை எல்லைக்கோட்டின் அருகே எம்பி குதித்துப் பிடித்தது) அபாரம். அது ஸ்பைடர்மேன் கேட்ச். சாதாரண மனிதனால் அப்படிப் பிடிக்க முடியாது. அவர் அடிக்கும் ஷாட்களும் எனக்கு இன்னும் அச்சரியத்தைத் தருகின்றன. அவரது பீல்டிங்கும் நம்ப முடியாததாக இருக்கிறது. இந்த வெற்றியின் உத்வேகத்துடன் ராஜஸ்தான் அணியை நாளை எதிர்கொள்கிறோம். இந்த வீரர்களுடன் ஆடும் லெவன் செட்டில் ஆகிவிட்டதில் எனக்கு மகிழ்ச்சி’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close