[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்
  • BREAKING-NEWS அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த சென்னை வந்தார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

தொடரும் சோகத்தில் டெல்லி, புதுத்தெம்பில் சிஎஸ்கே: தலைநகரில் இன்று மோதல்!

victory-will-ensure-a-top-two-spot-for-super-kings

பிளே -ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்று ஹாயாகிவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொள்கிறது, இன்று! ஐபிஎல் தொடரின் 52 வது லீக் போட்டி இது. 8 வெற்றி, 4 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கும் சிஎஸ்கே, இந்தப் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் ஐதராபாத்தைப் பின்னுக்குத் தள்ளி, முதலிடம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது. 

முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத்துக்கு எதிராக 180 ரன்கள் இலக்கை சேசிங் செய்த சிஎஸ்கே, புதுத் தெம்போடு இன்று களமிறங்கும்.

சிஎஸ்கே அணி பேட்டிங்கில் ஸ்ட்ராங்க். அம்பதி ராயுடு (535 ரன்), ஷேன் வாட்சன் (424 ரன்), கேப்டன் தோனி (413 ரன்), சுரேஷ் ரெய்னா (315 ரன்) என வலுவாக இருக்கிறார்கள். இதில் ராயுடுவும் வாட்சனும் சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார்கள். இன்றைய போட்டியிலும் இவர்கள் கலக்குவார்கள் என எதிர்பார்க்கலாம். ஆனால் பந்துவீச்சு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அதுவும் டெத் ஓவர்கள் எனப்படும் கடைசிக்கட்ட ஓவர்களில் ரன்களை விட்டுக் கொடுப்பதில் தாராளமாக இருக்கிறார்கள். 

இதுவரை 11 விக்கெட் வீழ்த்தியுள்ள ஷர்குல் தாகூர் கடந்த போட்டியில் சிறப்பாக வீசினார். 7 விக்கெட் வீழ்த்திய தீபக் சாஹர், ரன்களை விட்டுக்கொடுப்பதில் சிக்கனமாக இருக்கிறார். 9 விக்கெட் வீழ்த்தியுள்ள அனுபவ வீரர் பிராவோ, சில நேரம் பாராட்டும்படி வீசுகிறார், சில நேரம் கடுப்பேற்றுகிறார். இவர்கள் தவிர வாட்சன், டேவிட் வில்லே பந்துவீச்சு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. சுழல்பந்துவீச்சாளர்கள் ஹர்பஜன் சிங்கும் ஜடேஜாவும் சில போட்டியில் மட்டுமே தங்கள் ஆக்ரோஷத்தைக் காண்பித்தார்கள். இவர்களும் சிறப்பாக செயல்பட்ட்டால், இன்றைய போட்டியில் சிஎஸ்கேவின் கொடி பறக்கும்.

‘கடைசிக்கட்ட ஓவர்களில் ரன்களை குறைவாக விட்டுக்கொடுப்பது முக்கியம். அதற்காக எங்கள் வீரர்கள் கடுமையாக பயிற்சி எடுத்திருக்கி றார்கள். அந்த ஓவர்களில் சரியான காம்பினேஷன் அமையவேண்டும். எந்த காம்பினேஷன் சரியாக இருக்கும் என்று ஆலோசித்துள் ளோம். எங்கள் அணியின் பீல்டிங்கும் கொஞ்சம் மேம்பட வேண்டும்’ என்று கூறியிருக்கிறார் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற் சியாளர் மைக் ஹசி தெரிவித்துள்ளார். இதனால் பந்துவீச்சாளர்களில் சிலர் மாற்றப்படுவார்கள் என்று தெரிகிறது.

புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி அணி, அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. இருந்தாலும் இந்தப் போட்டியில் வெற் றி பெற்று ஆறுதல் அடைய விரும்புவார்கள். டெல்லி அணியின் பேட்டிங் வரிசை ஸ்ட்ராங்காக இருக்கிறது. 582 ரன்கள் குவித்துள்ள ரிஷா ப் பன்ட், 386 ரன்கள் குவித்துள்ள கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா, மற்றொரு இளம் வீரர் அபிஷேக் ஷர்மா ஆகி யோர் சிறப்பாக ஆடுகிறார்கள்.

பந்துவீச்சில் போல்ட் சிக்கனமாக ரன்களை விட்டுக்கொடுக்கிறார். மற்றவர்கள் சொல்லிக்கொள்ளும்படி வீச இல்லை. நேபாள வீரர் சந்தீப் லாமி ச்சன்னே, தென்னாப்பிரிக்காவின் ஜூனியர் டாலா, தமிழகத்தின் விஜய் சங்கர் ஆகியோர் சிறப்பாகச் செயல்படும் பட்சத்தில் டெல்லி அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டிக்கு முன்னேறாத ஒரே அணி, டெல்லிதான். அந்த சோகம் இந்த முறையும் தொடர்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. 

இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close