[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.
  • BREAKING-NEWS நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்
  • BREAKING-NEWS மதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு
  • BREAKING-NEWS ஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்? - தம்பிதுரை எம்.பி.
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது? - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி

முடிவுக்கு வருகிறது டாஸ் பாரம்பரியம்? ஐசிசி பரிசீலனை!

to-toss-or-not-to-toss-icc-may-scrap-tradition

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாரம்பரியமான டாஸ் போடும் முறையை கைவிட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிசீலித்து வருகிறது.

கிரிக்கெட் போட்டிகள் முதன் முதலில் தொடங்கப்பட்டபோதே, டாஸ் போடும் முறை இருந்து வருகிறது. அதாவது முதல் டெஸ்ட் போட்டி, 1877ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்தது. இந்தப் போட்டியிலேயே டாஸ் போடப்பட்டது. உள் நாட்டு அணியின் கேப்டன் டாஸ் போடுவார். வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் கேப்டன் பூவா , தலையா என்று கேட்பார். அப்போது ஆரம்பிக்கப்பட்ட இந்த சம்பிர தாயம் இன்றுவரை தொடர்ந்து வருகிறது.

டெஸ்ட் போட்டியை நடத்தும் நாடுகள் தங்களுக்கு சாதகமாகவே பிட்ச்-ஐ தயார் செய்து விளையாடுகின்றன. இதனால் எதிரணிகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. இதுபற்றி யாரும் வாய்த்திறக்காமல் இருந்தாலும் சமீபகாலமாக இப்படி ஒரு தலைபட்சமாக பிட்சை அமைத்துக் கொள்வதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. 

இதையடுத்து டாஸ் போடும் முறையை டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துவருகிறது. அதாவது 2019-ல் நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் போட்டியில் புதிய நடைமுறையை செயல்படுத்த இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து விளையாட வந்திருக்கும் அணியின் கேப்டனே, பந்துவீசுவதா, பேட்டிங் செய்வதா என்பதை முடிவுசெய்வார் எனக் கூறப்படுகிறது.

இதுபற்றிய ஐசிசி கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்பட இருக்கிறது. இதற்கான கூட்டம் இம்மாத இறுதியில் நடக்கிறது. 

அனில் கும்ப்ளே, ஆண்ட்ரு ஸ்ட்ராஸ், மகிளா ஜெயவர்த்தனே, ராகுல் டிராவிட், டிம் மே, நியூசிலாந்தின் கிரிக்கெட் வாரியத்தின் டேவிட் வொயிட், நடுவர் ரிச்சர்ட் கேட்டில்போரோ, போட்டி நடுவர்கள் ரஞ்சன் மடுகளே, ஷான் பொல்லாக், கிளார் கனோர் ஆகியோரைக் கொண்ட சர்வதேச கிரிக்கெட் பயிற்சியாளர்களின் பிரதிநிதிக் குழு வரும் 28-29-ம் தேதிகளுக்கு முன்பாக இதுபற்றி பேசி முடிவெடுக்கும் எனக் கூறப்படுகிறது. 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் லேமேன் இந்த டாஸ் முறைக்கு ஏற்கனவே எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். ரிக்கி பாண்டிங், மைக்கேல் ஹோல்டிங், இயான் போத்தம், ஷேன் வார்ன், ஸ்டீவ் வாக் ஆகியோரும் இந்த முறைக்கு ஏற்கனவே எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : TossICCTraditionCricketடாஸ்ஐசிசி
Advertisement:
Advertisement:
[X] Close