[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்
  • BREAKING-NEWS தென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்
  • BREAKING-NEWS பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்

சிறந்த பந்துவீச்சாளர் என்பதை பும்ரா நிரூபித்துவிட்டார்: புகழ்கிறார் ’பஞ்சாப்’ அஸ்வின்!

bumrah-once-again-proved-what-a-good-bowler-he-is-ashwin

தான் சிறந்த பந்துவீச்சாளர் என்பதை பும்ரா மீண்டும் நிரூபித்திருப்பதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் சொன்னார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த 50வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் -மும்பை அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், மும்பை அணியில் டுமினிக்கு பதிலாக பொல்லார்ட் சேர்க்கப்பட்டார். பஞ்சாப் அணியில் கருண் நாயர், மயங்க் அகர்வால் நீக்கப்பட்டு யுவராஜ்சிங், மனோஜ் திவாரி இடம் பிடித்தனர்.

‘டாஸ்’ வென்ற பஞ்சாப் கேப்டன் அஸ்வின், பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த மும்பை அணி, 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. பொல்லார்ட் 50 ரன்களும் குணால் பாண்ட்யா 32 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் தரப்பில் ஆண்ட்ரூ டை 4 விக்கெட்டையும் அஷ்வின் 2 விக்கெட்டையும் விழ்த்தினர். பின்னர் ஆடிய பஞ்சாப் அணி வெற்றியின் விளிம்பில் தோல்வி அடைந்தது. அந்த அணியின்
கே.எல்.ராகுல் 60 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார். ஆரோன் பின்ச் 46 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 183 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் மும்பை அணி 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே-ஆப் சுற்றை தக்க வைத்துக் கொண்டது. பும்ரா 4 ஓவர்களில் 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பஞ்சாப் அணியின் பிளே-ஆப் வாய்ப்பு மங்கிவிட்டது.

தோல்விக்குப் பின் பேசிய பஞ்சாப் கேப்டன் அஸ்வின், ’இந்த நேரம் ஒன்றும் தோன்றவில்லை. மனம் வெறுமையாக இருக்கிறது. நாங்கள் சிறப்பாகவே சேஸிங் செய்துகொண்டிருந்தோம். இந்தப் போட்டியில் தொழில்முறை பேட்டிங் செயல்பாட்டைக் காட்டினோம். இருந்தாலும் இறுதியில் அது எங்களுக்கு சாதமாக நடக்கவில்லை. இதற்கான புகழ் பும்ராவையே சேரும். தான் சிறந்த பந்துவீச்சாளர் என்பதை அவர் மீண்டும் நிரூபித்திருக்கிறார். இந்தத் தோல்வியை அடுத்து அதிர்ஷ்டத்தை நம்பி இருக்கிறோம். கடந்த போட்டியில் எங்கள் செயல்பாடு பற்றி வீரர்களுடன் விவாதித்தோம். அதையடுத்து இந்தப் போட்டியில் நன்றாகவே விளையாடினோம். ராகுலும் ஆரோன் பின்ச்சும் சிறப்பாக செயல்பட்டனர். கடைக்கட்டத்தில் ராகுல் செய்தது (பும்ரா பந்தை தூக்கி அடித்தது) தவறா சரியா என்பது பற்றி சொல்வது கடினம்’ என்றார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close