[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

குல்தீப் சுழலில் சிக்கிய ராஜஸ்தான்: பிளே ஆஃப்பை தக்க வைத்த கொல்கத்தா

kolkata-knight-riders-ride-on-kuldeep-yadav-s-magic-spell

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி கொல்கத்தா பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தற்போது லீக் சுற்று போட்டிகள் நடைப்பெற்று வருகிறது. இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. இன்னும் இரண்டு இடங்களே உள்ள நிலையில் பிளே ஆஃப் சுற்றில் நுழைய மற்ற அணிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று நடைப்பெற்ற போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்  ரைடர்ஸ் அணியும் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக ரன்குவிப்பில் ஈடுபட்டனர். அந்த அணி 4 ஓவர்களில் 50 ரன்களை கடந்தது. இவர்களின் ஆட்டத்தை பார்த்தபோது,  அந்த அணி பெரிய இலக்கை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குல்தீப் யாதவ் பந்துவீச வந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. ராஹனே , ஜோஸ் பட்டலர் ஆகியோரின் விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தினார் யாதவ். அதன்பின்னர் வந்தவர்கள் கொல்கத்தாவின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். முடிவில் ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 142 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பின்னர்  களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேன் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். 7 பந்துகளை சந்தித்தவர் 21 ரன்களில் அவுட் ஆனார். இதில் 2பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களை விளாசினார்.இதனையடுத்து களமிறங்கிய உத்தப்பா 6 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.கிறிஸ் லின் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் பொறுப்பான ஆட்டத்தால் கொல்கத்தா அணி 18 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. லின் 45 ரன்களும், தினேஷ் கார்த்திக் 41 ரன்களும் குவித்தனர்.இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close