[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.
  • BREAKING-NEWS நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்
  • BREAKING-NEWS மதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு
  • BREAKING-NEWS ஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்? - தம்பிதுரை எம்.பி.
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது? - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி

இப்படி பண்ணிட்டாங்களே... அஸ்வின் ஏமாற்றம்!

really-disappointing-ashwin

’நாங்கள் பெரிய வித்தியாசத்தில் தோற்கடிக்கப் பட்டிருக்கிறோம். இந்த தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது’ என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறினார். 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 48 வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. 
டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீசியது. அதன்படி பஞ்சாப் வீரர்கள் கே.எல்.ராகுல், கெயில் களமிறங்கினர். ராகுல் 21 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணியின் சரிவு தொடங்கியது. தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தது. ஆரோன் பின்ச் மட்டும் 26 (23) ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 15.1 ஓவரில் பஞ்சாப் அணி 88 ரன்களுக்குள் சுருண்டது. உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த ஐபிஎல் தொடரில் எடுக்கப்பட்ட குறைவான ஸ்கோர் இது. 

இதையடுத்து 89 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோலியும், பார்த்திவ் படேலும் அதிரடியாக விளாடினர். பெங்களூரு அணி 8.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது. கோலி 48 (28), பார்த்திவ் பட்டேல் 40 (22) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
உமேஷ் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார். 

தோல்விக்குப் பின் பேசிய பஞ்சாப் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும்போது, ‘இந்த தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் சரியாக விளையாடவில்லை. எங்கள் பேட்ஸ்மேன்கள் தடுமாறிவிட்டார்கள். எப்படியிருந்தாலும் இந்த தோல்வியில் இருந்து அடுத்தக் கட்டத்துக்கு நகர வேண்டும். இதுவரை ஆடிய போட்டிகளில், 20 ஓவர்களில் மூன்று அல்லது நான்கு விக்கெட்டுகளை இழந்திருக்கிறோம். இந்தப் போட்டியில் 15 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டோம்.

நாங்கள் பெரிய வித்தியாசத்தில் தோற்கடிக்கப் பட்டிருக்கிறோம். எங்கள் ரன் ரேட்டும் கணிசமாகக் குறைந்துவிட்டது. அடுத்து மும்பை அணியையும் சென்னை அணியையும் எதிர்கொள்கிறோம். அந்தப் போட்டிகளில் வெல்ல வேண்டும். பெரும்பாலான வீரர்கள் நீண்ட நாட்களாக விளையாடி வருகிறார்கள். அவர்களின் அனுபவம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். எங்களிடம் சிறப்பான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் இதுவரை சிறப்பான இன்னிங்ஸை கொடுக்கவில்லை. அதற்கான நேரம் இது’ என்றார் 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close