[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

ஒரு வாரமா நாங்க பட்டபாடு இருக்கே... விராத் கோலி பேட்டி

the-last-one-week-has-been-really-crazy-for-us-virat-kohli

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 48 வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. 
டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீசியது. அதன்படி பஞ்சாப் வீரர்கள் கே.எல்.ராகுல், கெயில் களமிறங்கினர். ராகுல் 21 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணியின் சரிவு தொடங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. ஆரோன் பின்ச் மட்டும் 26 (23) ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 15.1 ஓவரில் பஞ்சாப் அணி 88 ரன்களுக்குள் சுருண்டது. உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த ஐபிஎல் தொடரில் எடுக்கப்பட்ட குறைவான ஸ்கோர் இது. 

இதையடுத்து 89 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோலியும், பார்த்திவ் படேலும் அதிரடியாக விளாடினர். பெங்களூரு அணி 8.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது. கோலி 48 (28), பார்த்திவ் பட்டேல் 40 (22) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 


பெங்களூரு அணிக்கு இது 5வது வெற்றி. அதேபோல், 12 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணிக்கு இது 6வது தோல்வி ஆகும். இதனால் பஞ்சாப் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் பெங்களூர் அணி வெற்றி பெற்றால், மற்ற அணிகளின் முடிவை பொறுத்து வாய்ப்பு அமையும்.

வெற்றிக்குப் பின் விராத் கோலி கூறும்போது, ‘கடந்த ஒரு வாரமாக பைத்தியம் பிடித்தது போல் இருந்தது. ஒருகட்டத்தில் பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறிவிட்டோம் என்றே நினைத்தேன். ஆனால், அடுத்தடுத்தப் போட்டிகளில் வெற்றி பெற்று பாயின்ட் டேபிளிலில் முன்னேறியதும் நம்பிக்கை பிறந்தது. அடுத்து வர இருக்கிற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்குச் செல்ல முடியும். ரன் ரேட்டும் நன்றாக இருக்கிறது. இன்றைய போட்டியில் எங்கள் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் அணியில் மேஜிக் ஸ்பின்னர் இல்லை. அதனால் அவர்கள் பேட்ஸ்மேன்களை வைத்து மிரட்ட நினைத்தார்கள். எதிர்மறை விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை. எங்கள் பந்துவீச்சாளர்கள் நன்றாக வீசினார்கள்.  உமேஷ் யாதவ் ஒரே ஓவரில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிறகு தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்தது. டாஸ் முக்கிய பங்கு வகித்தது’ என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close