[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்
  • BREAKING-NEWS மதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு
  • BREAKING-NEWS ஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்? - தம்பிதுரை எம்.பி.
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது? - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி

வாட்சன் மேஜிக் தொடருமா? ராஜஸ்தானை இன்று சந்திக்கிறது சிஎஸ்கே!

csk-meets-rr-again

பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இப்போது நடந்து வருகிறது. இதில், இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஜெய்ப்பூரில் நடக்கும் இந்த 43- வது லீக் போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும் என்பதால் வெற்றி பெறும் தீவிரத்தில் இருக்கிறது சிஎஸ்கே. 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள சிஎஸ்கே, 7 வெற்றி, 3 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது.

சென்னை அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவாக இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் 17-வது லீக் போட்டியில் சிஎஸ்கே மோதியபோது, ஷேன் வாட்சன் அதிரடி சதம் விளாசினார். 57 பந்துகளில், 9 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 106 ரன்கள் எடுத்தார் அவர்.  இன்றைய போட்டியிலும் அசத்துவார் என்று எதிர்பார்க்கலாம். 

அவரோடு அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி, ஆகியோர் விளாசி வருகிறார்கள். கடைசிக்கட்ட ஓவர்களில் தோனியின் அதிரடி ஷாட்டுகள் மிரள வைக்கின்றன. அவர் களத்தில் இறங்கினாலே ஆரவாரத்தில் அதிர்கிறது மைதானம். இவர்கள் இன்றும் அதிரடி காட்டினால் வெற்றி நிச்சயம்.

காயம் காரணமாக ஓய்வில் இருந்த இளம் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர், அணிக்கு திரும்பியிருப்பது பலம். பெங்களூருக்கு எதிராக, கடந்த போட்டியில் ஜடேஜா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி தன்னை நிரூபித்தார். இன்றைய போட்டியிலும் அவர் துல்லியமாகப் பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கலாம். கடந்தப் போட்டியில் களமிறங்கிய டேவிட் வில்லி சிறப்பாக செயல்பட்டார். இவர்களோடு அனுபவ வீரர்கள் ஹர்பஜன், பிராவோவும் இருக்கிறார்கள். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இது வாழ்வா சாவா போட்டி. 10 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி, 4 வெற்றி, 6 தோல்வி என்று 8 புள்ளிகள் பெற்றுள்ளது. மீதமுள்ள 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கிடைக்கும். இதனால் இன்றைய போட்டி அந்த அணிக்கு முக்கியமான ஒன்று.

ராஜஸ்தான் அணி கடந்த ஆட்டத்தில் பஞ்சாப்பை வென்றதன் மூலம் புதுதெம்புடன் இருக்கிறது. அந்த அணியின் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் ஆகியோரை அந்த அணி நம்பி இருக்கிறது. கேப்டன் ரஹானே, ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் இன்னிங்ஸில் இந்த தொடரில் நிலையானதாக இல்லை. பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் அசத்தி வருகிறார். ஜெயதேவ் உனட்கட் கைகொடுத்தால் சிஎஸ்கேவை கட்டுப்படுத்த வாய்ப்பிருக்கிறது.

ஐபிஎல் தொடரில் இரண்டு அணிகளும் இதுவரை 18 போட்டிகளில் சந்தித்துள்ளன. இதில் 12 போட்டியில் சென்னையும், 6-ல் ராஜஸ்தானும் வெற்றி பெற்றுள்ளது. போட்டி இன்று இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. 

ராஜஸ்தான் வீரர்கள் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக பிங்க் நிற ஜெர்சி அணிந்து இன்று விளையாடுகிறார்கள்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close