[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டன் ரஹானே !

ajinkya-rahane-will-lead-the-side-of-first-test-against-afghanistan

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக ரஹானேவை நியமித்துள்ளது பிசிசிஐ. இந்திய அணி ஆப்கானிஸ்தானுடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. அந்தப் போட்டியிலிருந்து தனக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என விராத் கோலி விரும்பியதால் ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கடந்தாண்டு கிடைத்தது.

இதனையடுத்து அப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை விளையாடவுள்ளது. இந்திய அணியுடனான தனது முதல் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஜூன் 14 முதல் ஜூன் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய அணிக்கு கருண் நாயர் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் வெகுநாட்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளனர்.

டெஸ்ட் அணியின் விவரம்: ரஹானே, ஷிகர் தவாண், முரளி விஜய், கே.எல்.ராகுல், புஜாரா, கருண் நாயர். சாஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, இஷாந்த் சர்மா மற்றும் ஷர்துல் தாக்குர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close