[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு

சென்னை அணி இன்று தோற்றால்..? யாருக்கு லாபம் !

kkr-wins-toss-and-elects-to-field-first-match-time-for-cskvkk

சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது.

சென்னை அணி இதுவரை 6 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில்  இருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் அடுத்த கட்டத்துக்கு நகரும். அதேபோல், அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியதையும் கிட்டத்தட்ட உறுதி செய்யும். 

இந்தப் போட்டியில் சென்னை அணியின் வெற்றியை டெல்லி டேர்டெவிஸ், மும்பை இண்டியன்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றன. சென்னை அணி வெற்றி பெறும் பட்சத்தில் கொல்கத்தா அணி அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் முயற்சி தடுத்து நிறுத்தப்படும். அதேபோல், மும்பை, டெல்லி அணிகளுக்கும் அவர்களுக்கான இறுதி வாய்ப்பு இன்னும் கொஞ்சம் நீடிக்கும்.  

கொல்கத்தா அணி வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியல் கிட்டத்தட்ட இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுவிடும். கொல்கத்தா தோற்றால் தான் பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, மும்பை அணிகளுக்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு குறைந்துவிடும். சென்னை அணியின் வெற்றியை மும்பை, டெல்லி அணி ரசிகர்கள் எதிர்பார்த்து இருப்பது போல் ரசிகர்கள் மீம்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர். 

  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close