[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

ஐபிஎல் கிரிக்கெட்: 5-வது வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா

ipl-cricket-kolkata-knight-riders-beat-royal-challengers-bangalore

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா அணி ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, ராகுல் 32 பந்துகளில் 52 ரன்களும், விராட் கோலி 44 பந்துகளில் 52 ரன்களும் எடுத்தனர். ஷேன் வாட்சன் 21 பந்துகளில் 34 ரன்கள் விளாசினார். பியுஷ் சாவ்லா, மோர்னே மோர்கல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

186 ரன்கள் என்ற வெற்றி இலக்கை கொல்கத்தா அணி, 5 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே எட்டியது. கேப்டன் கவுதம் கம்பீர் 29 பந்துகளில் 37 ரன்கள் விளாசினார். 5-வது விக்கெட்டுக்கு விளையாடிய யூசுப் பதானும், ஆண்ட்ரே‌ ரஸ்ஸலும் சிக்சர்களும், பவுண்டரிகளுமாக விளாசி கொல்கத்தா அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர். ரஸ்ஸல் 24 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார். யூசுப் பதான் 29 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆட்‌டநாயகன் விருது வென்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close