[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை

தோல்வியில் தவிக்கும் டெல்லி மீளுமா? பஞ்சாப்புடன் இன்று மோதல்!

delhi-daredevils-look-for-home-comfort-against-kings-xi-punjab

ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இப்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் அதிரடி வெற்றிகள் மூலம் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். 5 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே, நான்கு வெற்றிகளையும் ஒரு தோல்வியையும் பெற்று 8 புள்ளிகள் பெற்றுள்ளது. 

நான்கு வெற்றி, ஒரு தோல்வி என 8 புள்ளிகள் பெற்று பஞ்சாப் அணி இரண்டாம் இடத்தில் இருக்கிறது. டெல்லி அணி, ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கு தோல்வி, ஒரு வெற்றி பெற்றிருக்கிறது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. கடைசியில் இருக்கும் டெல்லியும் இரண்டாம் இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணியும் இன்று மோதுகின்றன.

பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல் அதிரடியாக மிரட்டி வருகிறார். அவர் ஒருவரே போட்டியின் முடிவை மாற்றி அமைத்து விடுகிறார் என்பதால் பஞ்சாப் தெம்பாக இருக்கிறது. அதோடு, கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், கருண் நாயர், ஆரோன் பின்ச், யுவராஜ் சிங், டேவிட் மில்லர், ஸ்டோயினிஸ் என அதிரடி பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இவர்களுக் கெல்லாம் கெயில் வாய்ப்பே கொடுப்பதில்லை. அவரே அதிரடி விளாசலை பார்த்துக்கொள்கிறார். பந்துவீச்சில் ஆண்ட்ரூ டை, அஷ்வின், ஸ்ரன், மோகித் சர்மா, முஜிப் ஆகியோர் கலக்கி வருகிறார்கள். அதனால் பஞ்சாப் அணி, அதிக நம்பிக்கையோடு இருக்கிறது. 

டெல்லி அணி, தொடர்ந்து தோல்விகளை சந்தித்து மன ரீதியாக பலமிழந்து காணப்படுகிறது. கவுதம் காம்பீர் தலைமை யிலான அந்த அணியில், ரிஷப் பன்ட், ஸ்ரேயாஸ் ஐயர், மேக்ஸ்வெல், டேன் கிறிஸ்டியன், காலின் முன்றோ, கிறிஸ் மோரி ஸ், விஜய் சங்கர், போல்ட், பிருத்வி ஷா போன்ற திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலான வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

பெங்களூருக்கு எதிராக நடந்த போட்டியில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் நன்றாக ஆடினர். இருந்தும் அந்த அணி தோல்வி யை தழுவியது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்பில் டெல்லி அணி இருக்கிறது. இதற்காக அந்த அணி கடும் பயிற்சியில் ஈடுபட்டது. இதன் காரணமாக இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் எனத் தெரிகிறது. 

டெல்லி, பெரோஷா கோட்லா மைதானத்தில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close