[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

சென்னை அணி ‘திரில்’ வெற்றி 

csk-won-by-4-runs-against-sunrisers

ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 

ராஜிவ் காந்தி மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன், முதலில் பந்துவீச தீர்மானித்தார். தொடக்க வீரர் ஷிகர் தவான் காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக ரிக்கி புகி சேர்க்கப்பட்டார். அதேபோல் சென்னை அணியில் இம்ரான் தாஹிர் நீக்கப்பட்டு, டு ப்ளசிஸ் சேர்க்கப்பட்டார். 

சென்னை அணியின் தொட்டக்க வீரராக வாட்சன் மற்றும் டு ப்ளசிஸ் களம் இறங்கினர். கடந்த போட்டியில் சதம் கண்ட வாட்சன் இந்த போட்டியில் 15 பந்தில், 1 சிக்சருடன் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து டு பிளிசிஸ் உடன் சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். ஹைதராபாத் அணியின் சிறப்பான பந்துவீச்சால் முதல் 6 ஓவர்களில்ல் 27 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ரஷித் கான் வீசிய 8 வது ஓவரில், டு பிளிசிஸ் 11 ரன்களோடு வெளியேற, சென்னை அணியின் நிலைமை இன்னும் பரிதாபமாக மாறியது. அதன்பின் ரெய்னா உடன், அம்பத்தி ராயுடு ஜோடி சேர்ந்தார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் 10 ஓவரில் 54 ரன்கள் எடுத்தது. இந்த ஐபிஎல் சீசனில் முதல் 10 ஓவரில் குறைவான ரன் இதுவே ஆகும். இந்த ஜோடி முதலில் நிதானமாக விளையாடியது. அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக அம்பத்தி ராயுடு பவுண்டரிகளும், சிக்சர்களுமாய் விளாசினார். 27 பந்தில் அரைசதம் அடித்தார் அம்பதி ராயுடு. 17வது ஓவரில் 37 பந்துகளில், 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 79 ரன்கள் குவித்து அவர் ரன்அவுட் ஆனார். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்தது. கடைசி வரை ஆட்டமிழக்காத ரெய்னா, 43 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தார்.

இதன்பின் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு, சென்னை வீரர் தீபக் சஹார் பந்து வீச்சில் மிரட்டல் காட்டினார். முதல் ஓவரில் ரிக்கி புகியை அவுட் ஆக்கிய சஹார், அடுத்தடுத்த ஓவர்களில் மனிஷ் பாண்டே மற்றும் ஹூடாவை வெளியேற்றினார். 4 ஓவர்களில் 17 டாட் பால், ஒரு மெய்டன் 3 விக்கெட்டுகளை சஹார் கைப்பற்றினார். எனினும் பின்னர் இணைந்த வில்லியம்சன் - யூசுப் பதான் ஜோடி அதிரடியாக ஆடியது. கேன் வில்லியம்சன் 84 ரன்களிலும், பதான் 45 ரன்களிலும் அவுட் ஆக, கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கடைசி ஓவரில் அந்த அணி 14 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close