[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

பெங்களூர் வீரர்களின் பந்துவீச்சை சிதறடித்த சஞ்சு சாம்சன்

rcb-vs-rr-latest-score-updates-sanju-samson-fires-rajasthan-to-217-4

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணிக்கு 218 ரன் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற வருகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரராக அந்த அணியின் கேப்டன் ரஹானே மற்றும் ஷார்ட் இருவரும் களம் இறங்கினர். ஷார்ட் 17 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து களம் இறங்கிய சஞ்சு சாம்சன் தொடக்கம் முதலே பெங்களூர் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ரஹானே 20 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ்(27), பட்லர்(23) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஒவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 217 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 45 பந்துகளில் 92 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் 10 சிக்சர்களும், இரண்டு பவுண்டரிகளும் அடங்கும். 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பெங்களூர் அணி விளையாடி வருகிறது.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close