[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

தோனியை ஏமாற்றிய கட்டட நிறுவனம்

the-building-company-has-cheated-dhoni

இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மஹேந்திர சிங் தோனி, கேப்டன் கூல் என அனைவராலும் அழைக்கப்படுபவர். பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். தோனி புகழின் உச்சத்தை அடையும் போது, அனைத்தும் அவரை தேடி வந்தது. விளம்பரங்களும் கூட,பல்வேறு நிறுவன பொருட்களை விற்பனை செய்யும் விளம்பர தூதராக ஒப்பந்தமும் செய்யப்பட்டார்.

தோனியின் புகழை பயன்படுத்திக் கொண்ட பல்வேறு நிறுவனங்களில் ஒன்றுதான் அம்ரபாலி கட்டிட நிறுவனம். நீங்கள் டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களுக்கு செல்பவராக இருந்தால், இந்தப்பெயர் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். வட இந்தியாவின் அடுக்குமாடி கட்டிடங்களில் அம்ரபாலியின் பெயர் இருக்கும். அண்ணாந்து பார்த்தால் புறாக்கூடு போல இருக்கும் வீடுகளை கட்டுவதில் வல்லவர்கள்.

அம்ரபாலி நிறுவனம் தோனியை தன்னுடைய நிறுவன விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்திருக்கிறது. அந்நிறுவனத்தின் அனைத்து விளம்பரங்களிலும் தோனியே தோன்றுவார் . வீடு விற்பார். விளம்பர தூதராக இருப்பதற்கு தோனிக்கு ஆண்டுக்கு சில கோடிகள் கொடுக்கப்படும். ஆனால் 150 கோடி ரூபாய் வரை தனக்கு கொடுக்க வேண்டிய ஒப்பந்த தொகையினை தரவில்லை என குற்றம் சாட்டியிருக்கிறார் தோனி. அதோடு வழக்கு ஒன்றையும் போட்டு அம்ரபாலி நிறுவனத்தை நீதிமன்றத்துக்கு இழுத்திருக்கிறார்.

அதே நேரத்தில் 7 ஆண்டுகளுக்கு அம்ரபாலி நிறுவனத்தின் விளம்பர தூதராக ஒப்பந்தம் ஆன தோனி, கடந்த 2016-ல் தனது ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டார். அம்ரபாலி நிறுவனம் முறைகேடாக நிலங்களை கையகப்படுத்தியதாகவும் , கட்டிட விற்பனையில் ஏமாற்றியதாகவும் கூறி , சமூக வலைத்தளங்களில் கேலி செய்யப்பட்டது. அப்படி கேலி செய்யும் போது , தோனி வருவது போன்ற விளம்பரம் வெளியானதால், தோனியும் கிண்டலுக்கு உள்ளானார் .பின்பு ஒப்பந்தத்தை தோனி முறித்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : DhoniதோனிCricketAmrapali
Advertisement:
Advertisement:
[X] Close