[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

ஒரு தரமான சம்பவம் காத்திருக்கு: தினேஷ் கார்த்திக்

we-shouldn-t-repeat-the-same-mistakes-dinesh-karthick

இனி வரும் போட்டிகளில் தவறுகளை திருத்திக்கொள்வோம் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைப்பெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக விளையாடியது. 15 ஓவர்களைக் கடந்த நிலையில் ஆட்டம் பரபரப்பாகவே காணப்பட்டது. கடைசி 5 ஓவர்களுக்கு 58 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அதிரடியாக விளையாடிய சாம் பில்லிங்ஸ் 23 பந்துகளில் 56 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இறுதி ஓவரில் ஒரு பந்து மீதம் இருந்த நிலையில், ஜடேஜா அடித்த சிக்சரால் சென்னை அணி மீண்டும் வெற்றி பெற்றது.

போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக்,  “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாண்டு தடைக்கு பின்னர் மீண்டும் களமிறங்கியுள்ளது. சொந்த மண்ணில் விளையாடும் போதும் ரசிகர்களின் ஆதரவு அவர்களுக்கு எந்த அளவுக்கு இருக்கும் என்பது நாங்கள் எதிர்பார்த்தது தான்.சென்னை வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆண்ட்ரு ரஸல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தனது பணியை அவர் சிறப்பாக செய்தார். டி20 கிரிக்கெட் போட்டியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இதையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும். டி20 கிரிக்கெட்டில் நீங்கள் சில போட்டிகளை இழக்க நேரிடும்.இதனை நேர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.இனி வரும் போட்டிகளில் இந்த தவறுகளை செய்ய மாட்டோம். அடுத்து நாங்கள் எங்கள் சொந்த மண்ணில் விளையாடவுள்ளோம். இரண்டு அணிகளுக்கும் இடையேயான அடுத்த போட்டி சிறப்பானதாக இருக்கும்” எனக் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close