[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு
  • BREAKING-NEWS பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக

60 ரன்னில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்!

pakistan-thrash-west-indies-in-1st-game

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் சென்று மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. பாதுகாப்புப் பிரச்னையை காரணம் காட்டி முன்னணி வீரர்கள் வெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை. இரண்டாம் கட்ட வீரர்கள் ஜேசன் முகமது தலைமையில் அங்கு சென்றுள்ளனர். முதல் போட்டி கராச்சியில் நேற்று நடந்தது. 

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ், முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பஹர் ஜமான் 39, ஹூசைன் டாலர் 41, கேப்டன் சர்ஃபிராஸ் அகமது 38, சோயிப் மாலிக் 37 ரன்கள் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தானின் துல்லியமான பந்துவீச்சில் விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. அந்த அணியின் சாமுவேல்ஸ் அதிகப்பட்சமாக 18 ரன்கள் எடுத்தார். இதையடுத்து அந்த அணி 13.4 ஓவர்களில் 60 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் குறைந்த பட்ச ஸ்கோர் இது. இதையடுத்து 143 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது. 

பாகிஸ்தான் தரப்பில் முமகது ஆமிர் இரண்டு ஓவர்கள் பந்துவீசி, 3 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் நவாச், சோயிப் மாலிக் ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் சுழல்பந்துவீச்சாளர் வீராசாமி பெருமாள், பந்துவீசிய முதல் ஓவரிலேயே காயமடைந்து சரிந்து விழுந்தார். அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், எழுந்து நிற்க முடியவில்லை. இதையடுத்து ஸ்டிரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்ட அவருக்கு பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று நடக்கும் இரண்டாவது போட்டியில் அவர் ஆடுவாரா என்பது தெரியவில்லை. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close