[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

குறைந்த பட்சம் பிளே ஆஃப்: தினேஷ் கார்த்திக் ஆசை!

confident-of-getting-best-out-of-team-dinesh-karthik

இந்த வருட ஐபிஎல் போட்டியில் குறைந்த பட்சம் பிளே ஆப் சுற்றுவரையாவது வரவேண்டும் என்பது என் நோக்கம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனும் தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் கூறினார். 

பதினோறாவது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி வரும் 7 ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை 8ஆம் தேதி சந்திக்கிறது. கொல்கத்தா அணியின் கேப்டனாக தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் பொறுப்பேற்றுள்ளார். துணை கேப்டனாக ராபின் உத்தப்பா நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் அணியின் புதிய சீருடை அறிமுக நிகழ்ச்சியில் தினேஷ் கார்த்திக் கூறும்போது, ’கொல்கத்தா அணிக்கு கவுதம் கம்பீர் செய்த சாதனை பிரமிக்க வைப்பது. அவரைப் போல என்னிடமும் நிர்வாகம் அதிகம் எதிர்பார்க்கும். அதை அறிவேன். அதனால் எனக்கு அழுத்தம் இருக்கும். குறைந்தபட்சம் பிளே ஆஃப் வரையாவது முன்னேற வேண்டும் என்பது என் நோக்கம். பங்களாதேஷுக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டி பைனலில் சிக்சர் அடித்து வெற்றி பெற வைத்தது பற்றி இப்போதும் கேட்கிறார்கள். அது முடிந்து நாட்கள் கடந்துவிட்டன. அதன் பிறகு நிறைய மாறிவிட்டன. ரசிகர்களும் அதிலிருந்து சென்றுவிட்டனர். ஐபிஎல் தொடரில் நான் பல்வேறு வரிசையில் இறங்குவேன். ஐபிஎல் என்பது சூழ்நிலைகளைச் சமாளிப்பது. அதற்காக வித்தியாசமாக என்னை நடத்திக் கொள்ள மாட்டேன். என் மனைவி தீபிகா பல்லிக்கல் பற்றி கேட்கிறார்கள். அவரிடம் இருந்து நான் உறுதியையும் கடின உழைப்பையும் கற்றுக் கொண்டேன். காமன்வெல்த் போட்டிகளுக்காக தீபிகா உண்மையில் கடினமாக உழைத்தார்’ என்றார்.

காம்பீர் தலைமையின் கீழ் கொல்கத்தா அணி ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் 2012, 2014-ல் சாம்பியன் பட்டம் வென்றது. மேலும் 2011, 2016, 2017-ம் ஆண்டுகளில் பிளே ஆஃப் சுற்றுவரை வந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close