[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

விராத் கலெக்‌ஷனில் காஸ்ட்லி கனவு கார்!

india-captain-virat-kohli-adds-dream-supercar-to-his-collection

கிரிக்கெட்டை எவ்வளவு நேசிக்கிறாரோ, அதை விட அதிகமாக கார்களை காதலிப்பவர் விராத் கோலி! 

வெளிநாட்டில் எந்த புதிய வகை கார் வந்தாலும் கை பரபரக்கும் அவருக்கு, ஓட்டிப் பார்க்க. அனுஷ்கா சர்மாவுடனான திருமணத்துக்குப் பிறகு புதிய கார் ஒன்றை புக் செய்திருந்தார் விராத். இப்போது அந்த காஸ்ட்லி கார் அவர் கைக்கு வந் திருக்கிறது. அந்த கார், பென்ட்லி கான்டினென்டல் ஜிடி (Bentley Continental GT)! இதன் விலை அதிகமில்லை, ஜஸ்ட் ரூ.3.29 கோடியில் இருந்து ரூ.4.43-க்குள்தான்! தனது சகோதரர் விகாஸ் கோலி பெயரில் இந்த காரை பதிவு செய்திருக்கிறார் விராத்.
இதே போன்ற காரை கிரிக்கெட் வீரர்கள் வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங் ஆகியோரும் வைத்துள்ளனர்.

ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான ’ஆடி’யின் ஆஸ்தான தூதர் விராத். இதன் காரணமாக இந்த நிறுவனம் புதிய கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்யும் போதெல்லாம் ஒரு காரை, கோலிக்கு பார்சல் பண்ணி வைக்கும். அதோடு, கிரிக்கெட் போட்டிகளில் பரிசாக கிடைக்கும் கார்களையும் சேர்த்து வைத்திருக்கிறார் விராத். அவரிடம் வேறு என்னென்ன கார்கள் இருக் கிறது?

ஆடி ஆர் 8 எல்எம்எக்ஸ் லிமிட்டெட் எடிசன் (Audi R8 LMX Limited Edition),  ஆடி ஆர் 8 வி 10 (Audi R8 V10), ஆடி ஏ8எல் டபிள்யூ12 குவாட்ரா (Audi A8L W12 Quattro), ஆடி எஸ் 6 (Audi S6), ஆடி க்யூ7 4.2 டிடிஐ (Audi Q7 4.2 TDI), டொயட்டா ஃபார்சுனர் (Toyota Fortuner) டஸ்டர் (Duster). 
ஆமா, இதையெல்லாம் நிறுத்த ஒரு ஸ்டேடியம் மாதிரி இடம் வேணுமே?

விராத்தின் கார்கள் கேலரி:

போட்டோ கேலரி

1 of 11

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close