[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

ஆபாசமாகத் திட்டும் ரசிகர்கள்: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு ஆஸி.கடிதம்!

newlands-crowd-abuse-disgraceful-lehmann

தென்னாப்பிரிக்க ரசிகர்கள், ஆஸ்திரேலிய வீரர்களை ஆபாசமாக திட்டுவதாகவும் இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடிதம் எழுதியுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுணில் நேற்றுமுன் தினம் தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி, முதல் இன்னிங்ஸில் அந்த அணி, 311 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் 141 ரன்களும் டிவில்லியர்ஸ் 64 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 9 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்துள்ளது. அதிகப் பட்ச மாக பான்கிராப்ட் 77 ரன்களும் லின் 47 ரன்களும் எடுத்தனர். தென்னாப்பிரிக்க தரப்பில் மோர்க்கல் 4 விக்கெட்டையும் ரபா டா 3விக்கெட்டையும் வீழ்த்தினர். 

நேற்றைய ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னர், ரபாடா பந்தில் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசினார். அடுத்த பந்தில் அவருக்கு சரியான பதிலடி கொடுத்தார் ரபாடா. அவரை கிளீன் போல்டாக்கினார். ஸ்டம்புகள் பறக்க அவுட் ஆன வார்னர், வருத்தத்துடன் பெவிலியன் திரும்பும்போது, ரசிகர் ஒருவர் வேகமாக கைதட்டியபடியே வந்து, வார்னரை திட்டினார். இதனால் கடுப்பான வார்னர், திரும்பி வந்து அந்த ரசிகருடன் மோதலில் ஈடுபட்டார். மைதானத்தின் பவுண்டரிலைன் அருகே இருவரும் ஆபாசமாகத் திட்டிக்கொண்டனர். இதையடுத்து அங்கிருந்த பாதுகாவலர்கள்
தலையிட்டு சமாதானப்படுத்தினர். 

இதுபற்றி ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லேமன் கூறும்போது, ’தென்னாப்பிரிக்க ரசிகர்கள் கடந்த இரண்டு நாட்களாக இழிவாக நடந்து கொள்கிறார்கள். இதற்கு முந்தைய போட்டியில் நடந்த சம்பவங்களை மனதில் வைத்து பவுண்டரி லைன் அருகே நிற்கும் ஆஸ்திரேலிய வீரர்களை அடிக்கடி ஆபாசமாகத் திட்டுகிறார்கள். ரசிகர்கள் சிலர் இப்படி நடந்துகொள்வது சகஜம்தான் என்றால் வீரர்களின் குடும்பத்தினரை எல்லை தாண்டி பேசிக்கொண்டிருப்பது ஏற்க முடியாததாக இருக்கிறது’ என்றார். 

மேலும் அவர் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அதில், ‘தென்னாப்பிரிக்க ரசிகர்கள், ஆஸ்திரேலிய வீரர்களை தனிப்பட்ட முறையில் விமர்சித்து வருகின்றனர். இது ரசிகர்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் அவர்கள் எல்லை தாண்டி செல்கின்றனர். இது இப்படியே தொடர்வது ஏற்புடையதல்ல. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். 

‘இந்த கடிதத்துக்கு அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்’ என்று லேமன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பு தலைமை அதிகாரி தபாங் மோரீ கூறும்போது, ‘ இரண்டு தரப்பு ரசிகர்களும் சில நேரம் மோசமாக நடந்துகொள்கிறார்கள். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ரசிகர்களை எப்போதுமே ஊக்குவிக்கிறது. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் சகித்துக்கொள்ள கூடியதல்ல’ என்று தெரிவித்தார். 


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close