[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிகவின் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்கள் கணிப்பைத்தான் பார்க்க வேண்டும்; கருத்துக்கணிப்பை முழுமையாக ஏற்க முடியாது - தம்பிதுரை
  • BREAKING-NEWS லண்டன் நீதிமன்றத்தில் வைர வியாபாரி நிரவ் மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி; இந்திய மதிப்பில் ரூ.4.50 கோடி பிணைத்தொகை செலுத்த தயாராக இருப்பதாக நிரவ் மோடி தரப்பு வாதம்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது குறித்து 24 ஆம் தேதி அறிவிக்கப்படும் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் தான் போட்டியில்லை என மாயாவதி அறிவிப்பு
  • BREAKING-NEWS அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்பது எந்த சட்டத்திலும் இல்லை- மதுரையில் ஒபிஎஸ் பேட்டி

சென்னையில் பயிற்சியை ஆரம்பித்தது தோனி டீம்!

back-home-captain-dhoni-cool-gets-down-to-bussiness

ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது, பதினோறாவது ஐபிஎல் திருவிழா! எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் பரபரப்பு இப்போதே தொற்றிக்கொண்டிருக்கிறது. சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் பஞ்சமில்லாத இந்த திருவிழாவில், இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு களமிறங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். அதனால் சென்னைக்கு விசில் போட, ரசிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் ஆர்வமாகி வருகிறார்கள். 

அணிக்கு ’தல’ தோனி மீண்டும் கேப்டனாகி இருக்கிறார். ’சின்ன தல’ ரெய்னா, சுழல்கள் ஜடேஜா, ஹர்பஜன் சிங், கரண் சர்மா, ஆல் ரவுண்டர் பிராவோ, வாட்சன், ஓபனிங் பேட்ஸ்மேன் முரளி விஜய், அதிரடி வீரர்கள் அம்பாதி ராயுடு, கேதர் ஜாதவ், இளம் வேகங்கள் லுங்கி நிகிடி, மார் வுட், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் என ஒரு அதிரடி கூட்டணி ஆர்ப்பாட்டமாக களமிறங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இண்டியன்ஸ் அணியும் மோதுகின்றன, மும்பை வான்கடேவில்!
போட்டிக்கு பத்து, பதிமுன்று நாள் இருந்தாலும் சென்னையில் இப்போதே பயிற்சியில் இறங்கிவிட்டது, தோனி படை!

சுரேஷ் ரெய்னா, பிராவோ உட்பட பெரும்பாலான வீரர்கள் சென்னை வந்துவிட்டார்கள். நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருக்கும் இவர்கள், சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று வலைப்பயிற்சியை மேற்கொண்டார்கள். தோனிக்கு கேரளாவின் இளம் பந்துவீச்சாளர் ஆசிப் பந்துவீசினார். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத்திடம் பயிற்சிப்பெற்றுள்ள ஆசிப்புக்கு தோனி, சில ஆலோசனைகளைக் கூறினார். பின்னர் அம்பாதி ராயுடுவுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார்.
பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங், வரும் 27-ம் தேதி அணியில் இணைந்து கொள்ள இருப்பதால் அதுவரை பந்துவீச்சு பயிற்சியாளர் எல். பாலாஜி கவனித்துக்கொள்வார் என்று தெரிகிறது.

‘இரண்டு ஆண்டுக்குப் பிறகு அணி களம் காணுவதால், முதல் போட்டி முக்கியம். அந்தப் போட்டியில் வென்றால் தன்னம்பிக்கையுடன் அடுத்தடுத்த போட்டிகளில் வீரர்கள் களமிறங்குவார்கள். அதனால், அந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்கிற ஆவலில் இப்போதே அணியினர் பயிற்சியை தொடங்கிவிட்டனர்’ என்றார் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகி ஒருவர்.

 
 

போட்டோ கேலரி

1 of 13

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close