[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்- உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஹெல்மெட் கட்டாயம் என்பதை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இருசக்கர வாகனங்களை விற்கும் நிறுவனங்களே ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி

தென்னாப்பிரிக்காவின் டீன் எல்கர் சதம்: ஆஸி.யின் கம்மின்ஸ் அபாரம்!

elgar-stands-firm-as-cummins-leads-aussie-revival

ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், தென்னாப்பிரிக்க வீரர் டீன் எல்கர் சதமடித்தார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுணில் நேற்றுத் தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. 

அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்கள் டீன் எல்கரும் மார்க்ரமும் களமிறங்கினர். மார்க்ரம் ரன் எதுவும் எடுக்காமல் ஹசல்வுட் பந்தில் கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அம்லா, 31 ரன்களிலும் டிவில்லியர்ஸ் 64 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கேப்டன் டுபிளிசிஸ் 5 ரன்னிலும், பவுமா ஒரு ரன்னிலும் விக்கெட் கீப்பர் டிகாக் 3 ரன்னிலும் பிலாண்டர் 8 ரன்னிலும் கேசவ் மகாராஜ் 3 ரன்னிலும் தொடர்ந்து ஆட்டமிழந்தனர். 

அனைவரும் வருவதும் போவதுமாக இருந்தாலும் தொடக்க ஆட்டக்காரர் எல்கர் நிலைத்து நின்று ஆடி 121 ரன்கள் குவித்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி, 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்துள்ளது. எல்கரும் ரபாடாவும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹசல்வுட் 2 விக்கெட்டுகளையும் மார்ஷ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. 


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close