[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

‘டாட் பந்து’களை என்னால் மறக்கவே முடியல - விஜய் சங்கர் உருக்கமான பேட்டி

nidahas-final-was-an-off-day-but-im-finding-it-difficult-to-forget-says-vijay-shankar

வங்கதேசத்துக்கு எதிரான இறுதிப்போட்டியை தன்னால் மறக்கவே முடியவில்லை என்று விஜய் சங்கர் கூறியுள்ளார். 

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. போட்டியில் இந்திய, வங்கதேச அணிகளுக்கு ஒரு கட்டத்தில் சமமாக இருந்தது. ஆனால் கடைசியில் விஜய் சங்கர் பேட்டிங்கில் நிறைய டாட் பந்துகள் ஆனது. 19 பந்துகளில் அவர் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 11 டாட் பந்துகள். இந்திய அணி வெற்றி பெறாமல் இருந்திருந்தால் விஜய் சங்கர் மீதுதான் அத்தனை விமர்சங்களும் விழுந்திருக்கும். ஆனால், எப்படியோ இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டது. 

இந்நிலையில், இறுதிப்போட்டியின் அனுபவங்கள் குறித்து விஜய் சங்கர் விரிவான பேசியுள்ளார். விஜய் சங்கர் கூறுகையில், “என்னுடைய பெற்றோர், நெருக்கமான நண்பர்கள் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் என்னை நீண்ட நாட்களாக பார்க்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் நான் எப்படி வளர்ந்து கொண்டிருக்கிறேன் என்று. நானோ இந்த அனுபவத்தை கடந்து போக நினைக்கிறேன். ஆனால் எனக்கு சில மெஜேஜ்கள் வருகிறது. அதில், ’சமூக வலைதளங்களில் உங்கள் குறித்து வரும் மீம்ஸ்களை பற்றி கவலைப்பட வேண்டாம்’ என்று ஆறுதல் கூறுகிறார்கள். அந்த நாள் எனக்கு வழக்கமான ஒரு நாளாக இல்லை. அதனை மறக்க கடினமாக இருக்கிறது. கஷ்டப்பட்டு மறந்து கொண்டிருக்கிறேன். எனக்கு தெரியும், இதனை கடந்தே ஆக வேண்டும் என்று. இறுதிப் போட்டி வரை எனக்கு நல்லதொரு தொடராகத் தான் இருந்தது. இந்திய அணிக்காக விளையாடும் போது, இதுபோன்ற விஷயங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இதே சமூக வலைதளம் நான் சிறப்பாக விளையாடி இருந்தால் வேறுமாதிரி பேசியிருக்கும். வளர்ச்சியில் இதுவும் உண்டுதானே. 

        

இரண்டாவது அல்லது மூன்றாவது பாலில் நான் டக் அவுட் ஆகி இருந்தாலும் யாரும் என்னுடைய ஆட்டத்திறன் குறித்து கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் தற்போது அப்படி இல்லை. இறுதிப் போட்டிக்கு பிறகு எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால், நானோ இது எப்படி நடந்தது என்று மனம் உடைந்து யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு ஹீரோ ஆவதற்கான வாய்ப்பு எனக்கு கொடுக்கப்பட்டது. முக்கியமான இடத்தில் என்னுடைய திறமையை காட்ட தவறிவிட்டேன். நான் வருத்தப்படக் கூடாது என்று அணியில் உள்ள ஒவ்வொருவரும், கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கூறினார்கள். 

சையது முஷ்டாக் அலி அல்லது விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடர்களில் என்னுடைய பேட்டிங்கை பார்த்தால் தெரியும். நான் டாக் பந்துகள் அதிகம் எடுப்பதில்லை. ஆனால், முஸ்தபிஜூர் மிகவும் நன்றாக பந்துவீசினார். அடுத்தப் போட்டியில் எப்படி தேர்வு செய்வார்கள் என்பது குறித்து நான் கவலைப்படவில்லை. ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதுதான் என் எண்ணம்” என்றார்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close