[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

இந்த வயதில் இப்படியொரு விருது: சிலிர்க்கிறார் வாஷிங்டன் சுந்தர்!

such-an-award-at-such-a-young-age-means-a-lot-washington-sundar

’இந்த இளம் வயதில் தொடர் நாயகன் விருதை வாங்குவது பெருமையாக இருக்கிறது’ என்று முத்தரப்பு டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த வீரர் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்தார். 

இலங்கையின் 70-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. லீக் சுற்று முடிவில் இந்தியாவும், பங்களாதேஷூம் ஃபைனலுக்கு முன்னேறின. இந்த அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடந்தது.
டாஸ் வென்ற இந்திய அணி, பங்களாதேஷை பேட்டிங் செய்யப் பணித்தது. இதையடுத்து அந்த அணி, 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சபீர் ரகுமான் அதிகப்பட்சமாக 77 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் சேஹல் 3 விக்கெட்டும், உனட்கட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 

பின்னர் ஆடிய இந்திய அணி, கடைசிக்கட்டத்தில் தடுமாறியது. போட்டி கைவிட்டுப் போய்விடும் என்ற நிலையில், தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். இதையடுத்து தினேஷ் கார்த்திக்கிற்கு ரசிகர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆட்ட நாயகன் விருது தினேஷ் கார்த்திக்கிற்கு வழங்கப்பட்டது. 

பின்னர் பேசிய தினேஷ் கார்த்திக், ‘இப்படியொரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி. அணிக்கும் மகிழ்ச்சி. இந்த தொடர் முழுவதும் சிறப்பாகவே நாங்கள் செயல்பட்டோம். இறுதி போட்டியில் வெற்றி பெறாமல் போயிருந்தால் அது துரதிர்ஷடமாக ஆகியிருக்கும். இந்தப் போட்டியின் இறுதிகட்டத்தில் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. முஷ்பிதாஷூர் சிறப்பாக பந்துவீசினார். அதனால் அடித்து ஆட வேண்டும் என்று முடிவு செய்து இறங்கினேன். அதிர்ஷ்டவசமாக அது சிறப்பாக அமைந்துவிட்டது. இந்திய அணியில் வாய்ப்புக் கிடைப்பது கடினம். கிடைக்கும் போது அதைச் சரியாகப்பயன் படுத்திக்கொள்ள வேண்டும். எனக்குப் பின்னால் இருந்து எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி’ என்றார்.

மற்றொரு தமிழக வீரரான, வாஷிங்டன் சுந்தருக்கு தொடர் நாயகன் விருது கிடைத்தது. அவர் கூறும்போது, ’இந்த இளம் வயதில் இப்படியொரு விருதை வாங்குவது பெருமையாக இருக்கிறது. இதற்கு என் குடும்பத்தினருக்கு நன்றி சொல்ல வேண்டும். பவர்பிளேவில் பந்து வீசுவது சவாலான ஒன்று. அதில் சிறப்பாக செயல்பட்டு விக்கெட் வீழ்த்தினேன். நாட்டுக்காக விளையாடுவது பெருமையான விஷயம். எப்போதும் பேட்ஸ்மேனின் மனநிலையை அறிந்து பந்துவீச வேண்டும். நான் அப்படித்தான் செய்தேன். தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடினார். இந்த தொடர், எனக்கு மறக்க முடியாததாக அமைந்துவிட்டது’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close