[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

டி 20 கிரிக்கெட்டில் கே.எல்.ராகுலுக்கு இப்படியொரு ரெக்கார்ட்!

kl-rahul-becomes-first-indian-batsmen-in-t20is-to-script-unwanted-record

டி20 போட்டியில் விராத் கோலியை விட அதிக ஆவரேஜ் வைத்திருக்கிறார் கே.எல்.ராகுல். இருந்தும் ஆடும் லெவனில் இடம் கிடைக்க போராடி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்கட்டும். நேற்று நடந்த போட்டியில் தேவையில்லாத ரெக்கார்டை படைத்திருக்கிறார் ராகுல்

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பில் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இந்திய அணியில் ரிஷாப் பண்டுக்குப் பதிலாக லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். 

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக குசால் மெண்டிஸ் 38 பந்தில் 55 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. இதில் கே.எல்.ராகுல் 17 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவர் அவுட் ஆனதுதான் ரெக்கார்ட் ஆகியிருக்கிறது.
அதாவது இலங்கை வீரர் ஜீவன் மெண்டிஸ் வீசிய பந்தை அடிக்கும் போது காலை பின்பக்கம் இழுத்தார் ராகுல். அது ஸ்டம்பில் தெரியாமல் பட, ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் டி20 போட்டியில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்த முதல் இந்திய வீரர் என்ற ரெக்கார்ட்டை பெற்றிருக்கிறார் அவர். தேவையில்லாத ரெக்கார்ட்தான் என்றாலும் ரெக்கார்ட், ரெக்கார்ட்தானே!

இவரைப் போல டெஸ்ட் போட்டியில், ஹிட் விக்கெட்டில் ஆட்டமிழந்த முதல் இந்திய வீரர் லாலா அமர்நாத் (1949). ஒரு நாள் போட்டியில் நயன் மோங்கியா (1995). டி20-யில் இப்போது ராகுல்!
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close