[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

பஞ்சாயத்த முடி அப்புறம் களத்துக்கு வரலாம் ! ஷமிக்கு பிசிசிஐ அளித்த ஷாக்

mohammed-shami-s-contract-on-hold

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு தனது மனைவியால் புதிய நெருக்கடி உருவாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவருக்கும் திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளார். இந்நிலையில் முகமது ஷமி குறித்து அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பிருப்பதாகவும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழிப்பதாகவும் அவர் தனது முகநூல் பக்கத்தில் ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார் இந்த விவகாரம் தற்போது ஷமியின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு பெரிய இடியாக வந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்தை இன்று வெளியிட்டது. இதில் ஷமியின் பெயர் இடம்பெறவில்லை. ஷமி மற்றும் அவரது குடும்பம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் தற்போது வெளியாகியுள்ளது. ஷமியின் ஒப்பந்தம் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  ஆனால் இதுபோன்று எந்த விதிமுறையும் இல்லை. இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வந்த பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close