[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

ஐபிஎல் கிரிக்கெட்: குஜராத் அணி த்ரில் வெற்றி

ipl-cricket-gujarat-lions-beat-delhi-daredevils-by-one-run

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணி ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது. டெல்லி அணிக்கு எதிரான‌ விறுவிறுப்பு நிறைந்த போட்டியில் குஜராத் அணி 1 ரன் வித்தியாசத்தில்‌ வெற்றி பெற்றது.

டெல்லியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர்களான ஸ்மித் 30 பந்துகளில் 53 ரன்களும், மெக்கல்லம் 36 பந்துகளில 60 ரன்களும் விளாசினர்.

ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷான் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். தினேஷ் கார்த்திக் 19 ரன்களும், ஃபாக்னர் ஆட்டமிழக்காமல் 22 ரன்களும் எடுத்தனர். இம்ரான் தாஹீர் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டுளையும் வீழ்த்தினர்.

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடிய டெல்லி அணி 16 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறியது. டூமினியுடன் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து சீராக ரன்கள் சேர்த்த ரிஷப் பந்த் 20 ரன்களில் வெளியேறினார்.

இதன்பின்னர் களமிறங்கிய கிறிஸ் மோரிஸ் சிக்சர்களாக விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். டூமினி 48 ரன்களில் வெளியேறினார். எனினும் மறுமுனையில் மோரிஸ் விளாசல் ஆட்டத்தை தொடர்ந்தார். கடைசி பந்தில் வெற்றிக்கு 4 தேவை என்ற நிலை டெல்லி அணிக்கு ஏற்பட்டது. அந்த பந்தில் மோரிஸ் இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்க, குஜராத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றிக்காக போராடிய மோரிஸ் 32 பந்துகளில் 82 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close