[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்

விராத் உடலில் மேலும் ஒரு டாட்டூ!

virat-kohli-spotted-at-a-tattoo-parlour-in-mumbai

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியை ஆக்ரோஷமானவராகவும் ரன் மெஷினாகவும்தான் பார்த்திருப்போம். ஆனால், அவர் டாட்டூ காதலர் என்பது பலர் அறியாத ஒன்று. டாட்டூ மீது அப்படியொரு காதல் அவருக்கு. டாட்டூகளால் நிரம்பியிருக்கிறது அவரது கைகள், தோள்பட்டை, முதுகு!

தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களை வென்று சாதனை படைத்துவிட்டு இந்தியா திரும்பிய விராத், வந்ததும் வராததுமாக செய்த வேலை, டாட்டூ பார்லருக்கு சென்றது. 

இலங்கையில் நடக்கும் முத்தரப்பு தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் இன்னும் ஒரு மாதம் விராத், ஜாலி கோலி! இதனால் மும்பை பாந்த்ராவில் உள்ள டாட்டூ பார்லர் ஒன்றுக்கு நேற்று சென்ற விராத், பத்தாவது டாட்டூவைக் குத்திக்கொண்டார். 

ஏற்கனவே, சாம்ராய்ஜ்ஜியம், தியானத்தில் இருக்கும் சிவன், சாமுராய் வீரன், பெற்றோர் பெயர்கள், அவரது கிரிக்கெட் எண், ஓம் உட்பட பல படங்களை உடலில் வரைந்துள்ள கோலி, இப்போது வரைந்திருப்பது ஒரு ஏலியனை!
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close