[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

முதல் டெஸ்ட்: டிவில்லியர்ஸ் போராட்டம் வீண், சுருண்டது தென்னாப்பிரிக்கா

starc-swings-first-test-australia-s-way-as-south-africa-crumble

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 162 ரன்களில் சுருண்டது. வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், 5 விக்கெட்களை வீழ்த்தி தென்னாப்ரிக்காவுக்கு நெருக்கடி அளித்தார்.

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. 5 விக்கெட் இழப்பிற்கு‌225 ரன்கள் என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. சதத்தை நெருங்கிய மிட்செல் மார்ஷ் 96 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 351 ரன்கள் சேர்த்தது.

பின்னர் முதல் இன்னிங்சைத் தொடங்கிய தென்னாப்ரிக்க அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தது. மறுமுனையில் டிவில்லியர்ஸ் நிலைத்து நின்று அரைசதத்தை எட்டினார். மற்ற வீரர்கள் விரைவில் பெவிலியன் திரும்பியதால், தென்னாப்ரிக்க அணி 162 ரன்களில் சுண்டது. டி வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 189 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close