[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

மகராஷ்டிராவில் ஐபிஎல் போட்டிகள் இல்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

sc-upholds-bombay-high-court-judgement-says-no-ipl-matches-in-maharashtra-after-may-1

மகராஷ்டிராவில் இருந்து ஐபிஎல் போட்டிகளை இடமாற்றம் செய்யக் கோரியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முன்னதாக, கடும்வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மகராஷ்டிரா மாநிலத்தில் மே 1-க்குப் பிறகு ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மும்பை கிரிக்கெட் சங்கம் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வறட்சி நேரத்தில் மகராஷ்டிராவில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது சரியில்லை என்று கூறி மும்பை கிரிக்கெட் சங்கத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close