[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

தோனி, கோலி யார் பெஸ்ட்? கணிக்கிறார் யுவராஜ் சிங்

yuvraj-hopes-to-play-in-wc

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின், பயிற்சியாளர் ஆக விரும்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

கடந்த வருடம் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருக்கிறார், 36 வயதான யுவராஜ் சிங். கேன்சரில் இருந்து மீண்டு இரண்டு மூன்று வருடங்களுக்குப் பின் அணியில் இடம்பிடித்த அவர், சமீபத்தில் யோ யோ டெஸ்ட்டில் தேர்வு பெற்றார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியுடன் ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.  

இதுபற்றி அவர் கூறியிருப்பதவது:
கிரிக்கெட்டில் வயது ஒரு பிரச்னையில்லை. ஆட்டத்திறன் தான் முக்கியம். கிரிக்கெட் விளையாட வந்த உடனேயே, யாரும் முதிர்ச்சி அடைந்துவிட மாட்டார்கள். பல கிரிக்கெட் வீரர்கள் முப்பது வயதுக்குப் பிறகுதான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நன்றாக விளையாடினால் அணியில் இடம் கிடைக்கும் என்பது நிச்சயம். விராத் கோலி தலைமையிலான இந்திய அணி, சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கேப்டனாக தோனியை விட, விராத் கோலி வித்தியாசமாக செயல்படுகிறார். தோனி அமைதியானார். கோலி, ஆக்ரோஷக்காரர். கேப்டனாக அவர் சிறப்பாகவே செயல்படுகிறார். இப்போதைய வீரர்கள் அடுத்த தலைமுறையினர். விராத் கோலி தலைமையில் அணி மாற்றம் அடைந்திருக்கிறது. 
 
கடந்த 18 வருடமாக சர்வதேசக் கிரிக்கெட்டில் இருக்கிறேன். ஓய்வு பெறும் திட்டம் இருக்கிறதா? என்று கேட்கிறார்கள். இன்னும் சில வருடங்கள் கிரிக்கெட் விளையாட இருக்கிறேன். இது சரியான நேரம் என்று நினைக்கும் நாளில் ஓய்வு பெறுவேன். அப்போது எந்த வருத்தமும் இன்றி கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவேன். உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என நினக்கிறேன். 
ஐபிஎல் போட்டியை பொறுத்தவரை இன்னும் இரண்டு மூன்று தொடரில் பங்கேற்பேன்.  ஓய்வுக்குப் பிறகு பயிற்சியாளர் ஆக விருப்பம் இருக்கிறது.
இவ்வாறு கூறியுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close