[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை
  • BREAKING-NEWS டெல்லி- மீரட் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திறப்பு
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜு
  • BREAKING-NEWS இயல்பு நிலைக்கு திரும்புகிறது தூத்துக்குடி
  • BREAKING-NEWS நாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை இன்று திறந்து வைக்கிறார் மோடி
  • BREAKING-NEWS வவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி

‘ரோகித்’தை புகழ்ந்த ‘கோலி’யின் பெருந்தன்மை!

virat-kohli-tells-rohit-sharma-the-biggest-factor-in-india-s-win-in-south-africa

தன்னை ரன் அவுட் ஆக்கிய ரோகித் ஷர்மாவை கேப்டன் விராட் கோலி புகழ்ந்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியின் மூலம், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. போர்ட்எலிசெபத் நகரில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 274 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 201 ரன்களில் ஆல் அவுட் ஆகியது. இந்திய தரப்பில் ரோகித் ஷர்மா 115 ரன்கள் எடுத்தார். இருப்பினும் தொடக்கத்தில் வேகமாக ரன்களை குவித்த கேப்டன் கோலியை 36 ரன்கள் எடுத்திருந்த போது ஒரு ரன் எடுப்பதற்காக முயன்று ரோகித் ஷர்மா ரன் அவுட் ஆக்கினார்.

இதுதொடர்பாக பேசியுள்ள விராட் கோலி, “ரோகித் ஷர்மாவின் விளையாட்டு ஆச்சர்யப்படும் வகையில் இருந்தது. அவர் ரன் அவுட் ஆக்கிவிட்டதை எண்ணத்தில் கொண்டு அதிருப்தி அடையாமல், நிதானமாக விளையாடி சதம் அடித்தார். இந்திய அணி 25 வருடத்திற்குப் பின் வரலாற்று வெற்றியை பெற்றிருப்பது மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இது அனைவரின் உழைப்பிற்கும் கிடைத்த வெற்றியாகும். இந்திய அணியில் ஒவ்வொரு ஆட்டத்தில் ஏதேனும் ஒரு வீரர்கள் வெற்றிக்கு வழி வகுக்கின்றனர். அந்த வகையில் இந்தியாவின் இரண்டு இளம் (குல்தீப், சஹால்) சுழற்பந்து வீச்சாளர்களும் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றனர்” என்று கூறியுள்ளார்.    

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close