[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் தேர்வு
  • BREAKING-NEWS பி.இ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 2 வரை அவகாசம் நீட்டிப்பு- அண்ணா பல்கலைக்கழகம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியை தவிர்த்த மற்ற 2 மாவட்டங்களில் இன்டர்நெட் சேவையை முடக்கியது ஏன்?- உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் முதலமைச்சர் குமாரசாமி
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: மதுராந்தகம் அருகே புதுமண தம்பதியுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சாலை மறியல்
  • BREAKING-NEWS தமிழக- கேரள எல்லையான களியக்காவிளையில் கேரள அரசுப்பேருந்துகள் நிறுத்தம்
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும்- தமிழக அரசு

காதலர் தின பரிசா ரோகித் சர்மாவின் செஞ்சுரி

rohit-sharma-scored-century-before-valentines-day

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மா காதலர் தின பரிசாக சதம் அடித்துள்ளதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர். 

தென்னாப்பிரிக்கா தொடர் ரோகித் சர்மாவுக்கு மிகவும் மறக்க முடியாத மோசமான தொடராக முடிந்திருக்கும், நேற்றையை 5வது ஒருநாள் போட்டியில் மட்டும் சதம் அடித்திருக்கவில்லை என்றால். ஏன் என்றால், அவ்வளவும் மோசமான பார்மில் இருந்ததாக அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. டெஸ்ட் தொடரில் 4 இன்னிங்சில் விளையாடிய ரோகித் சர்மா முறையே 11, 10, 10, 47 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதேபோல், முதல் நான்கு ஒரு நாள் போட்டிகளில் 20, 15, 10, 5 ரன்னில் ஆட்டமிழந்தார். நேற்றையப் போட்டியில் 115 ரன்கள் எடுப்பதற்கு முன்பு விளையாடிய 8 இன்னிங்சிலும் சேர்த்து மொத்தமே 128 ரன்களே எடுத்திருந்தார் ரோகித்.

          

இருப்பினும், 5வது ஒருநாள் போட்டியில் ரோகித் அடித்த சதம் மிகவும் முக்கியமான தருணத்தில் அடிக்கப்பட்டுள்ளது. அவரது சதம் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்ய உதவியுள்ளது. அதனால், ரோகித் சர்மா தன் மீதான விமர்சனங்களுக்கு ஓரளவுக்கு பேட்டிங்கால் பதில் அளித்துள்ளார். 

ஆனால், நெட்டிசன்களோ நேற்று ரோகித் சர்மாவை வைத்து பயங்கரமாக கலாய்த்து தள்ளினர். ரோகித் சர்மா ஒரு அரசியல்வாதிகளைப் போல் உள்ளதாக கூறிய ஒரு நெட்டிசன், ஒட்டு மொத்த தொடர் முழுவதும் சொதப்பிய அவர் தேர்வு நடைபெறுவது முன்பு மட்டும் 100 அல்லது 200 ரன்கள் எடுத்து தப்பித்துக் கொள்கிறார் என்று கூறியுள்ளார்.

          

இதனைவிட, ரோகித் சர்மா தனது மனைவிக்கு காதலர் தின பரிசாக சதம் அடித்துள்ளதாக தான் அதிகமான நெட்டிசன்கள் வரித்துக் கொண்டு கலாய்த்தனர். மனைவியின் பிறந்தநாளில் செஞ்சுரி, திருமண நாளில் இரட்டை சதம், காதலர் தினத்திற்கு முதல் நாள் செஞ்சுரி அடித்து வரும் ரோகித் சர்மா, நாட்டிற்காக விளையாடுகிறாரா அல்லது அவரது மனைவிக்காக விளையாடுகிறாரா என்று தெரியவில்லை என்று நெட்டிசன் ஒருவர் குறும்பாக கிண்டல் அடித்துள்ளார்.

          

ரோகித் சர்மா இலங்கை அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்த போது, தனது மனைவிக்கு திருமண பரிசாக அதனை சமர்பிப்பதாக கூறியிருந்தார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close