[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு
  • BREAKING-NEWS கொச்சி விமான நிலையம் மூடல்

வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி

indias-first-ever-odi-series-victory-in-south-africa-9th-consecutive-odi-series-win

தென்னாப்பிரிக்கா மண்ணில் முதல்முறையாக ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்றி, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை 2-1 என இந்திய அணி இழந்தாலும், நடந்து முடிந்த 4 ஒரு நாள் போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று 6 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்று முன்னிலை பெற்றிருந்தது. இதையடுத்து, போர்ட் எலிசபெத்தில் நேற்று நடைபெற்ற 5வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியின் மூலம், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.. 

இந்திய அணி தென்னாப்பிரிக்கா மண்ணில் 1992-ம் ஆண்டு முதல் 6 முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. ஆனால், இதுவரை இந்திய அணி ஒருமுறை கூட ஒருநாள் தொடரை வென்றதில்லை. 1992-ம் ஆண்டு 5-2 ஆம் ஆண்டில் தொடரை இழந்த இந்திய அணி, 1996-97 ஆம் ஆண்டில் 0-4 என்ற கணக்கில் முழுவதுமாக தோல்வியை தழுவியது. 2000-01 ஆம் ஆண்டில் கென்யா, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான முத்தரப்பு தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோற்றது. அதேபோல், 2006-07, 2013-14 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தொடர்களை இந்திய அணி முறையே 0-4, 0-2 என்ற கணக்கில் தொடர்களை தோற்றது. முன்னாள் கேப்டன் சவுரங் கங்குலி தலைமையிலான இந்திய அணி 2003-ல் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை சென்று ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இந்த நிலையில், தற்போது அந்த வரலாற்றை மாற்றி புதிய வரலாற்றை விராட் கோலி தலைமையிலான அணி படைத்துள்ளது.

          

இந்த தொடரை கைப்பற்றியதன் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக 9 தொடர்களை கைப்பற்றி ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்து இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். தொடர்ச்சியாக 14 ஒருநாள் தொடர்களை கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணி(மே 1980-1988) முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா அணி தொடர்ச்சியாக 8 ஒருநாள் தொடர்களை(ஏப்ரல் 2009-ஜூன் 2010) வென்று இரண்டாவது இடத்தில் இருந்தது. அதனை இந்திய அணி பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. 7 ஒருநாள் தொடர்களை தொடர்ச்சியாக வென்று பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் 4வது இடத்தில் உள்ளன. 

          

இதனிடையே, தென்னாப்பிரிக்கா அணி தனது சொந்த மண்ணில் இரண்டாவது முறையாக ஒருநாள் தொடரை இழந்துள்ளது. முன்னதாக 2013-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக தொடரை இழந்து இருந்தது. தற்போது இந்திய அணி உடன் 4-1 என்ற கணக்கில் இழந்துள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close