[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி
  • BREAKING-NEWS சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி
  • BREAKING-NEWS தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்
  • BREAKING-NEWS உத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்

ரவீந்திர ஜடேஜாவுக்கு தோனி கொடுத்த வாக்குறுதி!

dhoni-s-assurance-spurs-jadeja-s-batting

சமீபகாலமாக பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் சுழல் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா. டிசம்பர் மாதம் ராஜ்கோட்டில் சவுராஷ்ட்ரா சங்கம் நடத்திய டி20 போட்டியில் 69 பந்துகளில் 154 ரன்கள் குவித்து அசத்தினார் ஜடேஜா. இதில் ஒரே ஓவரில் ஆறு சிக்சர்களும் அடங்கும். 

இந்நிலையில், விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. ‘டி’ பிரிவில் நேற்று முன் தினம் நடந்த ஒரு ஆட்டத்தில் ஜார்கண்ட் அணிக்கு எதிராக சவுராஷ்ட்ரா அணி வெற்றி பெற்றது. இதில் ரவீந்திர ஜடேஜா 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 113 ரன் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். 

 பேட்டிங்கில் கவனம் செலுத்தி வருவது பற்றி அவரிடம் கேட்டபோது, ’வரும் ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆட இருக்கிறேன். இந்த ஐபிஎல் தொடரில் எனக்கு பேட்டிங்கிற்கு அதிக வாய்ப்பளிக்க இருப்பதாக தோனி கூறியிருக்கிறார். பேட்ஸ்மேனுக்கான தகுதி என்னிடம் இருக்கிறது என்றும் அவர் சொன்னார். அவர் சொன்னது, என்னை ஊக்கப்படுத்தியது அதனால் பேட்டிங்கிலும் இப்போது அதிக கவனம் செலுத்தி வருகிறேன். முழு பேட்ஸ்மேனாகவும் என்னை உயர்த்த நினைக்கிறேன். பந்துவீச்சில் பேட்ஸ்மேன் செய்யும் தவறால் விக்கெட் எடுப்பதை விட, வெரைட்டியாக பந்துவீசி விக்கெட் எடுத்தால் மகிழ்வேன். அதற்காகப் பயிற்சி எடுத்துவருகிறேன் ’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close