[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு

தவான் சதம் வீண்: ’பிங்க் டே’வில் தென்னாப்பிரிக்கா மீண்டும் வெற்றி!

plucky-south-africa-pull-one-back

இந்திய அணிக்கு எதிரான 4ஆவது ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் 4-வது ஒரு நாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. 

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தினார். அவர் 109 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். விராத் கோலி 75 ரன்கள் குவித்தார். தோனி 42 ரன்கள் எடுத்தார்.

அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, 7.2 ஓவரில், ஒரு விக்கெட்டுக்கு 43 ரன் எடுத்திருந்த போது மின்னல் மற்றும் மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. பின் 28 ஓவர்களில் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என டக்வொர்த் லூவிஸ் முறைப்படி இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. 

முடிவில் தென்னாப்பிரிக்க அணி 25. 3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் மார்க்ரம், பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். அம்லா மற்றும் டுமினி விக்கெட்டை குல்தீப் யாதவ் சாய்த்தார். அதிரடி வீரர் வில்லியர்ஸ், 26 ரன்களில் பாண்ட்யா பந்தில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த மில்லர், சேஹல் பந்துவீச்சில் அவுட் ஆனார். இதனால் தடுமாறிய தென்னாப்பிரிக்காவை, விக்கெட் கீப்பர் கிளாசனும் ஆல்ரவுண்டர் பெலுக்வாயாவும் அதிரடியாக ஆடி விளையாடி வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். கிளாசன் 27 பந்தில் 5 பவுண்டரி ஒரு சிக்சருடன் 43 குவித்தார். பெலுக்வாயா 5 பந்தில் 3 சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்தார். ஆட்ட நாயகன் விருது கிளாசனுக்கு வழங்கப்பட்டது. 

பிங்க் நிற சீருடை அணிந்து விளையாடிய போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணி தோற்றதில்லை என்ற சென்டிமென்ட் நேற்றும் தொடர்ந்தது. பிங்க் நிற சீருடை அணிந்து விளையாடிய 6ஆவது போட்டியிலும் வெற்றியை பதிவு செய்து, தொடரில் 1-3 என்ற கணக்கில் உள்ளது தென்னாப்பிரிக்கா.


 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close