[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்

விராட் கோலியின் புதிய மைல்கல்கள்..!

virat-kohli-reached-most-runs-by-a-captain-on-a-tour-to-south-africa-all-3-int-formats

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பல்வேறு மைல்கல்களை எட்டியுள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்தது. இதனையடுத்து 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஜோகன்னஸ்பர்க் நகரில் இன்று 4வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கேப்டன் விராட் கோலி 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இந்த ஒருநாள் தொடரில் 4 இன்னிங்சில் விராட் கோலி இதுவரை 393 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு சதங்களும், ஒரு அரைசதமும் அடங்கும். ரன் சராசரி 196.50. ஸ்டிரைக் ரேட் 95.0. இன்னும் இரண்டு ஒருநாள் போட்டிகள் மீதமுள்ளது. 

இந்நிலையில், தென்னாபிரிக்காவுக்கு எதிரான இந்த தொடரில் கோலி மொத்தம் 628* ரன்கள் எடுத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கேப்டனாக அடிக்கப்பட்ட அதிக ரன்கள் இதுதான். கோலிக்கு அடுத்தபடியாக பிரைன் லாரா 2003-04 ஆண்டில் 627 ரன்கள் எடுத்ததே இதுவரை சாதனையாக இருந்தது. 

அதேபோல், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அதிக பேட்டிங் சராசரியை கோலி வைத்துள்ளார். அவரது சராசரி 61.33 ஆகும். அவருக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரங் கங்குலி 50.50 சராசரி வைத்துள்ளார். சங்ககாரா(45.87), தில்ஷான்(45.04), மைக் ஹசி(44.83), மைக்கேல் பெவன்(44.73) சராசரி எடுத்துள்ளார்கள். 

          

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்தியர் கோலி(393*) ஆவார். அவருக்கு அடுத்தபடியாக கங்குலி(285), சச்சின்(274), தவான்(269*) ரன்கள் எடுத்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close