[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முன்னாள் மத்திய அமைச்சர் இ.பொன்னுசாமி அதிமுகவிலிருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்தார்
  • BREAKING-NEWS டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக தலைமை அலுவலகம் நாளை திறப்பு
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகா எதிர்க்கும் - கர்நாடகா முதல்வர் சித்தராமையா
  • BREAKING-NEWS பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த முறைகேடு குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS கமல் ஆலோசனை பெறவில்லை; மூத்த தலைவர் என்ற முறையில் மரியாதைக்காக சந்தித்தார் - நல்லகண்ணு
  • BREAKING-NEWS மக்களுக்காக யார் சேவை செய்தாலும் அவர்களை மதிக்க கடமைப்பட்டுள்ளேன் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு

கோலி மாதிரி ஒரு கேப்டன்... புகழ்கிறார் வெஸ்ட் இண்டீஸ் தமிழ் வீரர்!

kohli-is-as-ruthless-as-richards-says-alwin-kallicharan

கோலி மாதிரியான ஒரு கேப்டன் இந்தியாவில் இதுவரை இல்லை என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தமிழருமான ஆல்வின் காளிச்சரண் தெரிவித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆல்வின் காளிச்சரண். தமிழ் வம்சாவளியை சேர்ந்த இவர், அந்த அணிக்காக, 66 சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலும் 31 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலுல் ஆடியுள்ளார். 

உத்தரபிரதேசத்தில் நடந்த கிரிக்கெட் விழா ஒன்றுக்காக வந்திருந்த இவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘விராத் கோலி உறுதியோடு விளையாடுகிறார். உறுதி என்பது முடிவுகளை சொந்தமாக எடுப்பது. விராத் கோலி போல ஒரு கேப்டன் இந்தியாவில் இதற்கு முன் இல்லை. கபில்தேவ் விதிவிலக்கு. அவர் பல அதிரடியான முடிவுகளை களத்தில் எடுப்பவர். அவர் எடுக்கும் முடிவு யாரும் நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கும். ஆனால் விராத் கோலி, கேப்டன் என்பதற்கு புதிய அடையாளத்தைத் தந்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸின் அதிரடி வீரர் விவியன் ரிச்சர்ட்ஸூடன் கோலியை ஒப்பிடுவது பற்றி கேட்கிறீர்கள். யாரையும் யாருடனும் ஒப்பிடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், கோலியின் செயல்பாடு, விவியனை விட இரக்கமில்லாமல் இருக்கிறது. பந்துகளை தயவு தாட்சண்யமின்றி விளாசுகிறார். எப்போதும் ரன் பசியோடு இருக்கிறார். அவர் வெற்றிகரமான கேப்டன்’ என்றார்.

ஆல்வின் காளிச்சரணின் சகோதரர் ஐசக் காளிச்சரணும், நாகமுத்துவும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close