[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முன்னாள் மத்திய அமைச்சர் இ.பொன்னுசாமி அதிமுகவிலிருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்தார்
  • BREAKING-NEWS டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக தலைமை அலுவலகம் நாளை திறப்பு
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகா எதிர்க்கும் - கர்நாடகா முதல்வர் சித்தராமையா
  • BREAKING-NEWS பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த முறைகேடு குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS கமல் ஆலோசனை பெறவில்லை; மூத்த தலைவர் என்ற முறையில் மரியாதைக்காக சந்தித்தார் - நல்லகண்ணு
  • BREAKING-NEWS மக்களுக்காக யார் சேவை செய்தாலும் அவர்களை மதிக்க கடமைப்பட்டுள்ளேன் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு

உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராத்: பாக். முன்னாள் கேப்டன் சர்டிபிகேட்!

virat-kohli-is-a-genius-and-best-in-the-world-javed-miandad

உலகின் சிறந்த பேட்ஸ்மேன், விராத் கோலிதான் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத் கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுடன் நேற்று நடந்த ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அபார சதமடித்த விராத் கோலி, 160 ரன்கள் குவித்தார். இதையடுத்து அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மியான் தத் பாராட்டியுள்ளார். 
பாகிஸ்தான் இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ’கோலியின் வலுவான பேட்டிங் டெக்னிக்கும் திறமையும் இக்கட்டான நிலையில் இருந்து இந்திய அணியை  வெற்றிக்கு அழைத்து வருகிறது.

ஒரு பேட்ஸ்மேனின் டெக்னிக் மோசமாக இருந்தால் ஒரு சில போட்டிகளில் அதிக ரன் குவிக்கலாம். ஆனால் கோலியின் டெக்னிக் வேறு. அவர் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். பந்துவீச்சாளர்களின் பலம் மற்றும் பலவீனத்தை அவர் உடனடியாக அறிந்துகொள்கிறார். அவர் ஜீனியஸ். உலகின் சிறந்த பேட்ஸ்மேன் அவர்தான்’ என்று தெரிவித்துள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close