[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

கங்குலியை முந்தினார் விராத் கோலி!

captain-kohli-beats-ganguly

கேப்டனாக அதிக சதம் அடித்த இந்திய வீரர் பட்டியலில் கங்குலி சாதனையை விராத் கோலி முந்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இந்த இந்திய அணி, ஆறு போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி, நேற்று மூன்றாவது போட்டியில் விளையாடியது. கேப்டவுனில் நடந்த இந்தப் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியில் சதம் அடித்திருந்த விராத் கோலி, இந்தப் போட்டியிலும் சதம் அடித்தார். அவர் 160 ரன்கள் குவித்தார். 

இந்த சதத்தின் மூலம், கேப்டனாக அதிக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமை கோலிக்கு கிடைத்தது. அவர் 12 சதம் அடித்துள்ளார்.இதற்கு முன் சவுரவ் கங்குலி கேப்டனாக 11 சதம் அடித்திருந்தார். அவர் சாதனையை விராத் முந்தினார்.

தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய வீரர் ஒருவரின் அதிகப்பட்ச ரன்னாகவும் இது பதிவானது. கேப்டவுன் மைதானத்தில் தென்னாப்பிரிக்கவுக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய வீரர், விராத் கோலிதான்.

இந்தத் தொடரில் இவர், இதுவரை 318 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் தென்னாப்பிரிக்க மண்ணில் அந்த நாட்டுக்கு எதிராக ஒரு நாள் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close