[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இன்றைய விலை: பெட்ரோல் ரூ.74.74; டீசல் ரூ.65.96
  • BREAKING-NEWS முன்னாள் மத்திய அமைச்சர் இ.பொன்னுசாமி அதிமுகவிலிருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்தார்
  • BREAKING-NEWS டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக தலைமை அலுவலகம் நாளை திறப்பு
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகா எதிர்க்கும் - கர்நாடகா முதல்வர் சித்தராமையா
  • BREAKING-NEWS பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த முறைகேடு குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS கமல் ஆலோசனை பெறவில்லை; மூத்த தலைவர் என்ற முறையில் மரியாதைக்காக சந்தித்தார் - நல்லகண்ணு
  • BREAKING-NEWS மக்களுக்காக யார் சேவை செய்தாலும் அவர்களை மதிக்க கடமைப்பட்டுள்ளேன் - கமல்ஹாசன்

ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா

team-india-s-practice-session-at-newlands

இந்தியா - தென்னாப்ரிக்க அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் நாளை நடைபெறுகிறது.

விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும்  இடையிலான டெஸ்ட் போட்டி முடிவடைந்ததையடுத்து 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டர்பன் மற்றும் செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்நிலையில் மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் நாளை நடைபெறுகிறது. பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்குத் தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் களம் காண்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த தென்னாப்ரிக்க அணி, வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது.அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ், கேப்டன் டூ பிளசிஸ்,விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் இல்லாதது அந்த அணிக்கு சிக்கலை அதிகரித்துள்ளது.  முன்னணி வீரர்களின் விலகல் தென்னாப்ரிக்க அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close