[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா

இன்று, 2-வது ஒரு நாள் போட்டி: மீண்டும் சாதிக்குமா விராத் டீம்?

india-will-aim-to-capitalise-on-the-proteas-woes

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது. 

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. டர்பனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது. விராத் கோலி சதமடித்தார். ரஹானே 79 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவினார். இந்த தொடரில் இந்திய அணி, 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது.

தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளிசிஸ், காயம் காரணமாக விலகியதால், அவருக்கு பதிலாக 23 வயதான எய்டன் மார்க்ராம், கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை வெறும் 2 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே டிவில்லியர்ஸ் காயத்தால் விலகிய நிலையில் டுபிளிசும் வெளியேறி இருப்பது தென்னாப்பிரிக்காவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இது இந்திய அணிக்கு சாதகம்.  சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவும், சேஹலும் இந்தப் போட்டியிலும் மிரட்டுவார்கள் என்று தெரிகிறது. செஞ்சுரியன் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் கடந்த போட்டியில் சாதித்த விராத் கோலியும் ரஹானேவும் இதிலும் சாதிப்பார்கள் என்று நம்மப்படுகிறது. இன்றையப் போட்டியில் இந்திய அணியில் மாற்றம் இருக்காது.

செஞ்சுரியன் ஆடுகளத்தில் இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 4-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் கண்டுள்ளது இந்திய அணி. 2 ஆட்டத்தில் முடிவில்லை. 

போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close